பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

பிடிப்புள்ளவராக இருந்தார். ஆனால், அவருடைய மகன் அபூஜந்தல் என்பவர் இஸ்லாமியக் கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்டு, முஸ்லிமாகி, இஸ்லாமிய முறையிலான வணக்க வழிபாடுகளை மேற்கொள்ளலானார். அவர் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாகியதை விரும்பாத மக்கா குறைஷிகள் அவரை எவ்வளவோ வற்புறுத்தி, அடித்து உதைத்துச் சித்திரவதை செய்து இஸ்லாத்தைவிட்டு விலகும் படி கோரினர். அபூஜந்தல் உறுதியாக மறுத்து, இஸ்லாத்தைப் பேணலானார். இதை விரும்பாத மக்கா குறைஷிகள் அவரை சங்கிலியால் கட்டி ஒரு வீட்டில் சிறை வைத்தனர். அவர் எப்படியோ தப்பித்து, ஹுதைபியா வந்துள்ள பெருமானாரோடும் முஸ்லிம்களோடும் இணைந்து கொள்ள ஹுதைபியா வந்து சேர்ந்தார். அதற்குச் சற்றுமுன்தான் ஒப்பந்தத்தில் பெருமானார் கையொப்பமிட்டிருந்தார். உடலெல்லாம் கடுமையான காயங்களோடு பசியாலும் பட்டினியாலும் வாடி வதங்கிப் போயிருந்த அபூஜந்தலை பெருமானாரும் பிற முஸ்லிம்களும் கண்டு பெரிதும் மனம் வருந்தினாலும் ஒப்பந்தத்தின் மூன்றாவது விதிப்படி ‘தற்போது மக்காவாசிகளுள் முஸ்லிம்கள் எவரும் காணப்படின் அவரை மதீனாவுக்கு அழைத்துச் செல்லக் கூடாது’ என்பதற்கிணங்க, பெருந்துன்பத்திற்காளாகி யிருந்த அபூஜந்தலை தங்களோடு அழைத்துச் செல்ல பெருமானார் விரும்பாது, அவருக்கு ஆறுதல் கூறி மக்கா குறைஷிகளிடமே ஒப்படைத்தார். எந்த நிலையிலும் ‘ஒரு முஸ்லிம் கொடுத்தவாக்கைக் காப்பாற்ற எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயங்கக் கூடாது’ என்ற நபியுணர்வு செயல் வடிவு பெற புதிய சம்பவம் ஒரு களமாக அமைந்தது. அத்துடன் உயிர்ச் சேதத்தையும் பொருட் சேதத்தையும் தவிர்க்கவும், எவ்வளவு வேறுபாடும் மாறுபாடும் உள்ள சமயத்தவர்களாயினும் அவர்களிடையே ஒருங்