பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

197

கிணைவையும் சமாதானத்தையும் பேண எத்தகு தியாகத்தையும் செய்யத் தயங்கக் கூடாது என்பதற்கு இஃதோர் சாட்சியாயுள்ளது.

சிலை வணக்க பனிகுளாஆ-இன மக்களை
பாதுகாக்கவே மக்கா படையெடுப்பு

ஏகத்துவத்தை ஏற்ற இறை நம்பிக்கையாளனான முஸ்லிம், கொடுத்த வாக்கை முழுமையாகக் காப்பாற்ற பெரிதும் கடமைப்பட்டுள்ளான் என்பதைக் கண்டோம்.

சிலை வணக்கக் குறைஷிகள் பெருமானரோடு ஹுதைபியா உடன்படிக்கை செய்து வீண் சண்டை சச்சரவு, உயிர் இழப்புகளைத் தவிர்த்துக் கொண்டார்கள் அல்லவா. அதே போன்று சிலை வணக்கச் சமயத்தைச் சேர்ந்த மற்றொரு பிரிவினரான பனிகுளாஆ வகுப்பினர் அண்ணலாரோடு நல்லுறவு கொண்டிருந்தார்கள். பெருமானாரும் அவர்தம் தோழர்களும் மாற்றுச் சமயத்தவர் எனக் கருதாது பனிகுளாஆ வகுப்பினரோடு நட்புக் கொண்டிருந்தனர்.

பெருமானாருக்கோ, பெருமானாரோடு உறவு கொண்டுள்ள பிறருக்கோ எந்த ஊறும் செய்யக்கூடாது என்ற ஹுதைபியா உடன்படிக்கைக்கு எதிராக மக்கா குறைஷிகள், தங்களைப் போன்றே சிலை வணக்க சமயத்தவர்களான பனிகுளாஆ வகுப்பினரைக் கடுமையாகத் தாக்கி, பொருட் சேதத்தையும் உயிர்ச் சேதத்தையும் உண்டு பண்ணினார்கள். அண்ணலாரோடு நல்லுறவு கொண்டிருந்த பனிகுளாஆ வகுப்பினர் பெருமானாரிடம் முறையிட்டனர். இஸ்லாத்துக்குப் புறம்பான சிலை வணக்கத்தவர்களை மற்றொரு சிலை வணக்கப் பிரிவினரான குறைஷிகள்தானே தாக்கினர் என எண்ணாமல் பனிகுளாஆ-மக்களைக் காக்கவேண்டிய பெரும் பொறுப்பு முஸ்லிம்களாகிய தங்களுக்கு உண்டு எனக் கருதிய அண்ணலார் இக்கொடிய தாக்குதலுக்குச்