பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

205

கூடாது என கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்தார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிருஸ்தவத் தலைமைப் பாதிரியாருக்கும் அவரைத் தொடர்ந்து வரக்கூடிய பாதிரியார்களுக்கும் முன்பு இருந்த உரிமைகள் அனைத்தும் மீண்டும் வழங்கப்பட்டன. அத்துடன் அவர்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட நிலங்களுக்குரிய நிலவரி முதலான அனைத்து வரிகளையும் வசூலித்துக் கொள்ளும் முழு உரிமையும் வழங்கப்பட்டன.

துருக்கியின் வெற்றிக்குப் பின் முதன் முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிருஸ்தவ தலைமைப் பாதிரியார் ஜென்னாதியாஸுக்குரிய, அப்போது தலைமைப் பாதிரியாருக்கு ஆயிரம் பொற்காசுகளையும் ஏறிச் சவாரி செய்ய குதிரையையும் அன்பளிப்பாக வழங்கினார். அக்குதிரை மீதேறி நகரில் பரிவாரத்துடன் பவனிவந்தார். கான்ஸ்டான்டிநோபிள் வெற்றி கொள்வதற்குமுன் அங்கிருந்த கிருஸ்தவ தலைமைப் பாதிரியாருக்கு என்னென்ன உரிமைகளும் அதிகாரமும் இருந்ததோ அவை அனைத்தையும் மீண்டும் சுல்தான் அளித்தார். இன்னும் சொல்லப்போனால் முன்னர் இருந்ததைவிட அதிகமான உரிமைகளும் அதிகாரமும் அளிக்கப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கிருஸ்தவர்களுக்கென தலைமைப் பாதிரியார் தலைமையில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. தங்கள் சமய அடிப்படையில் விசாரணை செய்து அபராதமும் சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டது. கிருஸ்தவ சமயக் குற்றவாளிகளுக்கென தனிச் சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டன. இந்நீதி மன்றங்கள் மரண தண்டனைவரை குற்றத் தண்டனை அளிக்க அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது, பாதிரியார்கள் வழங்கும் இத்தீர்ப்புகளை அமுல்படுத்தும் படி முஸ்லிம் அதிகாரிகளுக்கு சுல்தான் ஆணையிட்