பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

போற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. ஏனெனில், ‘மனிதன் இறையம்சமானவன்’ என இஸ்லாம் போதிப்பதைப் போல உலகச் சமயங்கள் பலவும் எடுத்தோதுகின்றன. ஆனால், அதற்குப் புறம்பான முறையில் மத நடவடிக்கைகள் அமைகின்றனவென்றால் அதற்கு மதம் காரணம் அல்ல. அந்த மதத்தை வழி நடத்துவதாகக் கூறி கொள்ளும் போலிச் சமயவாதிகளும் சமயப் போர்வையில் சுய லாபம் தேடியலையும் சுய நலக் கும்பல்களுமே காரணமாகும். சமய நெறிக்குப் புறம்பாக மக்களுக்கு மதவெறியைப் புகட்டி சமயத்தின் உன்னதத்தையே உருக்குலைத்து விடுகிறார்கள். இத்தகைய சமூக விரோதிகளை இனங்கண்டு ஒதுக்குவதன் மூலமே உண்மைச் சமயத்தின் உன்னதத்தை நிலை நாட்ட முடியும் என்பதை நாம் உணர்ந்து தெளிய வேண்டும்.

மேலும், மக்களுக்கு அவரவர் சமயத்தின் உண்மைத் தத்துவங்களை, கொள்கை கோட்பாடுகளை உரிய முறையில் உணர்த்துவதன் மூலம் அனாவசியமான ஐயப்பாடுகளை நீக்கி மனித உள்ளங்களை நெருக்கமடையச் செய்ய முடியும்.

அடிப்படை தேடும் ஆக்க விமர்சனம்

ஒரு முஸ்லிம் எந்தச் சமயத்தைப் பற்றியும் அறிந்து கொள்வதில் தவறில்லை. அஃது அவசியமும்கூட. அம் மதத்தவரின் சமயக் கருத்துகளை-தத்துவ நுட்பங்களை சடங்குகள், பழக்க வழக்கங்கள், மரபுகள் ஆகியவற்றைப் பற்றி தொடர்புடைய சமய அறிஞர்களோடு ஆக்க பூர்வமான விமர்சனக் கண்ணோட்டத்தில் வாதிப்பதும் ஆய்வதும் அம் மதக் கோட்பாடுகள், கொள்கைகள், சடங்கு, சம்பிரதாயங்கள் எந்த அளவுக்கு அச்சமயத்தின் இறை தூதரின் மூலக் கருத்துக்கு இசைவானவை என்பதை