பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210


எனவே, போதிய அடிப்படை ஏதும் இல்லாத, ‘எம்மதமும் சம்மதம்’ எனும் மேற்போக்கான முழக்கம் வெறும் குழப்பங்களுக்கு வழிகோளும் குழறுபடியான வாதமே தவிர வேறு அன்று. ஒவ்வொரு சமயத்தவர்களும் தங்கள் தங்கள் சமயம் உணர்த்தும் நெறிகளையும் சமயச் சம்பிரதாயங்களையும் பேணி வருவதே சரியானதாகவும் பொருத்தமுடையதாகவும் இருக்க முடியும்.

இன்னும் சொல்லப்போனால்,

‘எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்’, ‘எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள், மெய் பொருள் காண்பது அறிவு’ என்ற வள்ளுவர் வாய்மொழியை முற்றதாகப் புறக்கணித்து யார் கூறினும், எதைக் கூறினும் அஃது எனக்கேற்புடைத்தே என்ற முறையில் ‘கண்டதே காட்சி கொண்டதே கோலம்’ என்ற வகையில் செயல்படத் தூண்டும் இப்போக்கானது உண்மையைத் தேடியலையும் வேட்கையை மழுங்கச் செய்வதாகவும் ஆக்கிவிடுகிறது. உண்மை எது? உண்மையல்லாதது எது? என்ற பகுத்தறிவுப் பண்போ, உண்மையைக் கண்டறிந்து ஏற்கும் துணிவோ இல்லாத நிலை உருவாக வழிகோலும் ஒன்றே ‘எம்மதமும் சம்மதம்’ எனும் பொருளற்ற, உணர்ச்சித் தூண்டலான வெறும் முழக்கம்.

தடம்புரண்ட இறை வேதங்கள்

உலகிலுள்ள அனைத்துச் சமயங்களின் அடிப்படையும் ஒரே மாதிரியாகவே இறைவனால் இறைத் தூதர்கள் மூலம் மனித குலத்துக்கு வழங்கப்பட்ட போதிலும் அவற்றைக் காலப் போக்கில் மனிதர்கள் தங்கள் விருப்புவெறுப்புகளுக்கேற்ப மாற்ற திருத்தங்களைச் செய்து, அதன் தனித் தன்மைகளை மாற்றி விட்டனர் என்பதை முன்பே விரிவாகக் கண்டோம். முதல் மனிதரும் நபியுமான ஆதாம்