பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

211

(அலை) அவர்கள் தொட்டு இறுதி நபிவரை வழங்கப்பட்ட இறைச் செய்திகள் ஒரே மூலத்தையுடையனவே என்பதை திருமறை,

“(நபியே!) உமக்கு முன்வந்த இறை தூதர்களுக்குக் கூறப்பட்டது எதுவோ அதனையேயன்றி (வேறொன்றும் உமக்குக் கூறப்படவில்லை)” (41:43)

எனக் கூறும் திருக்குர்ஆன் வாக்கும், தொடர்ந்து,

“அவர்கள் தங்கள் வேத வசனங்களை சரியான இடங்களி லிருந்து மாற்றுகிறார்கள்” (5:13)

என்ற இறை வசனமும் மூல இறை வேதங்கள் எவ்வாறு மாற்ற திருத்தங்களுக்கு உள்ளாகித் தங்கள் தனித் தன்மையை, சரியான இறைநெறி வழிகாட்டலை இழந்து நிற்கின்றன என்பதை தெளிவாக்குகின்றன. ஆயினும் அவ்வேதங்களை உண்மையாகக் கொண்டு ஒழுகும் அவ்வச் சமய மக்களை மதிக்க வேண்டியது ஒவ்வொருவரின் இன்றியமையாக் கடப்பாடு ஆகும்.

நம்பிக்கையே நன்மை தரும்

ஒருவர் தன் மதத்தைப்பற்றி, அதன் சிறப்பம்சங்களைப் பற்றி எடுத்துக்கூறி விளக்குவது தவறாகாது. ஆனால், அம்மதக் கொள்கைகளை அவர்தம் விருப்பத்துக்கு மாறாக ஏற்கும்படி வலியுறுத்துவது-நிர்ப்பந்திப்பது-மத வெறியாகும். இத்தகைய போக்கை இஸ்லாம் மிகக் கடுமையாகக் கண்டிக்கிறது. அவர்களாக அறிந்து உணர்ந்து, தெளிந்து, அதன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு ஏற்றுச் செயல்படும் இயல்பான நிலையையே இஸ்லாம் வலியுறுத்துகிறது.

முஸ்லிம்கள் இஸ்லாத்தின் மீது, இறுதி இறைத்தூதர் மீது, அவர் மூலம் பெற்ற இறுதி இறைவேதமாகிய