பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

இராமானுஜருடைய இருதயம் விசாலமானதாக இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவர் பச்சாதாபப்பட்டு வருந்தினார். அவர்களுடைய பழைய அனுஷ்டானங்களையும் பழக்க வழக்கங்களையும் இயன்றவரையில் பரிசுத்தப்படுத்தி புதியதாக்கி ஆதரித்தார். அதே சமயத்தில் உயர்ந்த ஆத்மீக சாதனைகளையும் பிராமணர்களிடமிருந்து பறையர்கள்வரை அனைவருக்கும் உரிமையாக்கினார். இதுதான் இராமனுஜர் செய்த அரும்பணி. இப்பணி வட இந்தியா முழுவதும் முஸ்லிம்கள் ஆட்சியின் போதே பரவியது எனலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார் விவேகானந்தர்.

இதிலிருந்து ஹிந்து சமயச் சீர்திருத்தத்துக்கு, பக்தி இயக்க எழுச்சிக்கு இஸ்லாமும் இஸ்லாமியர் ஆட்சியும் பெருந்துணையாயமைந்து, இந்த நாட்டில் ஏற்றத் தாழ்வற்ற சமத்துவ சமுதாயம் உருவாக நேர்முகமாகவும் மறைமுகமாகவும் உதவிவந்ததை விவேகானந்தர் சுட்டிக்காட்டுவதன் மூலம் நம்மால் உணர்ந்து தெளிய முடிகிறது.

அதுமட்டுமல்ல சமய சுதந்திரத்தைப் பேணிக் காப்பதிலும் சமூக ஒருமைப்பாட்டை உருவாக்குவதிலும் முஸ்லிம் ஆட்சி எத்தகைய பங்காற்றியுள்ளது என்பதை ‘கிழக்கும் மேற்கும்’ என்ற நூலில் விவேகானந்தர் விவரிக்கும்போது,

“மதத்தின் கதவுகளைத் தொடாமல் திறந்தே வைத்திருக்க வேண்டும். தொடக்கூடாது... முகம்மதிய சாம்ராஜ்ஜியம் நம் நாட்டில் நீண்ட காலத்திற்கு எவ்வளவு வலிமையுடனும் திண்மையுடனும் விளங்கிற்று என்பதை எண்ணிப் பாருங்கள். இதற்கு என்ன காரணம்? அவர்கள் (முஸ்லிம்கள்) நம் மதத்தில் தலையிடாததுதான். சொல்லப் போனால் இந்துக்களே முகம்மதியப் பேரரசிற்குப் பெரும் ஆதாரமாக, தாங்கும் தூண்களாக விளங்கினார்கள் எனலாம். ஜஹாங்கீர், ஷாஜஹான், தாராசிகோ போன்ற முகலாய