பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

இந்தியாவில் உள்ள அனைத்துச் சமயங்களையும் அவற்றைப் பின்பற்றுபவர்களையும் சமமாகப் பாவிப்பதும் நடத்துவதும் இக்கொள்கையின் அடிப்படை நோக்கமாகும்.

மதச் சார்பின்மை கொள்கை பற்றி 7.8.1952 அன்று மாநிலங்களவையில் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் கூறிய கருத்து மேலும் தெளிவூட்டுவதாக அமைந்துள்ளது.

“ஒரு மதச் சார்பற்ற அரசு என்றால் என்ன? எந்த ஒரு மதத்திற்கும் எதிரானதல்ல. மதச்சார்பற்ற தன்மை என்பது, எந்த ஒரு மதத்தையும் இந்த அரசு பின்பற்றவில்லை என்பதுதான் அதன் பொருள். இத்தகைய அரசு எந்த ஒரு மதத்தையும் ஆதரிக்கவில்லை அல்லது எதிர்க்கவில்லை என்பது தான் அதன் உட்பொருள். எந்த ஒரு மத விவகாரங்களிலும் தலையிடுவது மதச் சார்பற்ற அரசின் வேலையல்ல, எல்லா மத விவகாரங்களிலும் அது நடுநிலை வகிக்க வேண்டும்” என்ற காயிதே மில்லத்தின் கருத்து மிகக் தெளிவாகவும் திட்பமாகவும் சமயச் சார்பின்மைக் கொள்கையை விளக்குகிறது.

இந்திய நாட்டில் வாழும் சிறுபான்மை இஸ்லாமியச் சமுதாயத்தினர் மதச்சார்பற்ற நம் அரசிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை 3-8-1951 ஆண்டில் லோக் சபையில் தலைவர் காயிதே மில்லத் அவர்கள் மிகத் தெளிவாக,

“ஒரு விஷேசமான சலுகைகளையோ, அதிகப்படியான அனுகூலங்களையோ, சிறுபான்மை மக்களாகிய நாங்கள் கேட்கவில்லை. நமது தாய்நாட்டில் பெரும்பான்மை சமயத்தினர் என்னென்ன உரிமைகளையும் சலுகைகளையும் அனுபவிக்கிறார்களோ, அத்தகைய சலுகைகளும் உரிமை