பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

225


சமயப் பிரச்சினைகளும் தீர்வும்

பல்வேறு சமயங்கள் உலவும் ஒரு நாட்டில், சமயத் தொடர்பாக எழும் பிரச்சினைகள் எதுவாயினும் அஃது சமயத் தலைவர்களாலேயே தீர்க்கப்பட வேண்டுமே யொழிய, சமயத்திற்கு அப்பால் உண்மையான சமய அறிவோ பற்றே இல்லாது இயங்கும் அரசியல்வாதிகளால் அல்ல. இவர்களின் தலையீட்டால் உண்மையான சமய உணர்வுகளும் ஆழிய சமயத் தத்துவக் கருத்துகளும் சிந்தனையும் பாழ்படுத்தப்படுவதோடு அவை கேலிக் குறியவைகளாகவும் ஆக்கப்பட்டு விடுகின்றன. எனவே மன ஒருமைப்பாடும் சமய நல்லிணக்க உணர்வும் உறுதி யாக நிலைபெற, அரசியலை சமயத்தோடு இணைக்கும் போக்குத் தவிர்க்கப்பட வேண்டும் என்பது கடந்த காலம் உணர்த்தும் உண்மையாகும்.

கோயில், மசூதி, சர்ச், விகார், குருத்துவாராக்களை விட்டு சமுதாய வீதியில் கால்வைக்கும் ஒவ்வொருவரும் சமயங் கடந்த இந்தியனாக, ‘எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் இந்திய மக்கள், எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் ஓர் விலை, எல்லோரும் இந்நாட்டு மக்கள்’ என்ற பாரதி கூறும் வாழ்வியல் நெறிக்கேற்ப வாழ முனைய வேண்டும். இதுவே உண்மையான இந்தியப் பண்பாடு. இதன் மூலமே அனைத்துச் சமயங்களைக் கண்ணியப்படுத்தவும் மனித நேயத்தை வளர்க்கவும் ஒருமைப்பாட்டுணர்வை வளர்க்கவும் வலுப்படுத்தவும் இயலும், இதற்கான ராஜபாட்டையாக அமைந்திருப்பதே இறை வழியாகிய இஸ்லாமிய நெறி முறை.

வேற்றுமையில் ஒற்றுமை

ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தும் பாவனையில் இந்தியா முழுவதும் ஒரேவிதப் பண்பாடு-இந்துத்துவப்