பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

தன்மையை ஏற்றுவர். காலப்போக்கில் இறைதூதரான அவர் இறைச் சக்தியின் வடிவமாகவே வாழ்ந்து மறைந்தவர் எனப் புகழாரம் சூட்டி, அவர்மீது இறைத்தன்மையை முற்றாக ஏற்றிப் புகழ்வர். நாளடைவில் அவர் இறைவனாகவே வாழ்ந்து மறைந்தவர் எனத் தம் விருப்பம் போல் இறை தூதரை இறைவனாகவே ஆக்கிவிடுவர். அதற்கேற்ப தம் விருப்பப்படி கற்பனையாகப் பல இறைத் தன்மை கொண்ட சம்பவங்களை உருவாக்கி, இவ்விறை தூதரின் வாழ்க்கை வரலாற்றோடு இணைத்தும் விடுவர். இவ்வாறு செய்வதன் மூலம் அத்தீர்க்கதரிசியை மக்களின் உணர்வில் அழுத்தமாக நிலை நிறுத்த முடியும் என்ற நோக்கில் செயல்பட அவ்விறை தூதர் நாளடைவில் மக்களால் மக்கள் முன் இறைவனாக ஆக்கப்பட, அடுத்தடுத்து வரும் மக்களும் அவரை இறைவனாகவே எண்ணி வழிபடுவர். இவ்வாறு ஏக இறைவனை வணங்கப் பணித்த இறைதூதர்களே இறைவனாக்கப்பட்டனர்,

இந்நிலைமை இறுதித் தூதராகிய தனக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற உணர்வில் பல எச்சரிக்கைகளை மக்களுக்கு விடுத்துச் சென்றுள்ளார் பெருமானார் (சல்) அவர்கள்,

“கிருஸ்தவர்கள் மர்யமின் மகனை (இயேசுவை) அளவு கடந்து உயர்த்தியதைப் போல், என்னை நீங்கள் உயர்த்தாதீர்கள். நானும் அல்லாஹ்வின் அடிமைதான். எனவே, என்னை அல்லாஹ்வின் அடிமை என்றும் அவனுடைய தூதர் என்று மட்டும் அழையுங்கள்”, எனக் கூறியுள்ளது இங்குக் கவனித்தற்குரியதாகும்.

அதே போன்று, அவ்விறை தூதர்கள் மூலம் இறைவனால் அருளப்பட்ட இறை வேதங்களிலும் மாற்ற திருத்தங்கள் செய்யப்பட்டன. வேத மொழிகளுக்கு