பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

“அவர்கள் தங்கள் வேத வசனங்களைச் சரியான இடங்களிலிருந்து மாற்றுகிறார்கள்.....!” (5:13)

எனத் திருமறையாம் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறியுள்ளது.

திருத்தப்படா திருவேதம்

அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கட்கு அளிக்கப் பட்ட இறைவேதம் அன்று முதல் இன்றுவரை காற்புள்ளி, அரைப்புள்ளிகூடத் திருத்தப்படாத, கடுகளவு மாற்றமும் செய்யப்படாத திருமறையாக, செம்மையான முறையில் இருந்து வருகிறது. இதற்கு மனிதக் காப்பல்ல, இறை காப்பே காரணமாகும்.

“நிச்சயமாக நாம்தான் இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம். ஆகவே, (அதில் எத்தகைய மாறுதலும் அழிவும் ஏற்படாதவாறு) நிச்சயமாக நாமே (அதன் பாதுகாவலனாகவும்) அதனை இரட்சித்துக் கொள்வோம்.” (திருக்குர்ஆன் 15:9)

எனத் திருமறையிலே இறைவன் கூறுகிறான். மாற்றம், திருத்தம், கூட்டல், குறைத்தல் ஏதுமில்லாது இவ்வுலகுள்ளளவும் இத்திருமறை இறைவனால் பாதுகாக்கப்படும் என்பதும் உறுதி.

முந்தைய வேதங்களை உண்மையாக்கும் திருக்குர்ஆன்

பெருமானார்க்கு முன்னதாக இறைவனால் அனுப்பப்பட்ட நபிமார்களைப் பற்றியும் அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ள வேதங்களைப் பற்றியும் இஸ்லாமியத் திருமறை,

“(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தையும் நாம்தான் உம்மீது அருளினோம். இது தனக்கு முன்னுள்ள (மற்ற) வேதங்களையும் உண்மையாக்கி