பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

வைக்கின்றது. அன்றி, அவற்றைப் பாதுகாப்பதாகவும் இருக்கிறது.” (திருக்குர்ஆன் 5:48)

எனத் தெளிவாகக் கூறுவதன் மூலம் ஆதாம் (அலை) தொடங்கி அண்ணல் நபிகள்நாதர்வரை வந்த இறைத் தூதர்களையும் அவர்கள் வாயிலாக மக்களுக்கு இறைவன் வழங்கிய வேதங்களையும் உண்மையாக்குகிறது திருக்குர் ஆன். அதுமட்டுமல்லாது உலகத்து மூல வேதங்களைப் பாதுகாத்து மக்களுக்கு இனங்காட்டும் ஒன்றாகவும் திகழ்கிறது.

திருத்தமாக முந்தைய
சமயக் கோட்பாடு

பல்வேறு உலகப் பெரும் சமயங்களின் கொள்கைகளும் கோட்பாடுகளும் திருத்தமான முறையில் திருக்குர் ஆனில் இடம் பெற்றிருப்பதை எளிதாகக் காண முடிகிறது.

இதை நபிமார்களின் வரலாற்றுப் போக்கிலேயே நன்கு உணர்ந்து தெளியலாம். மோசஸாகிய மூஸா (அலை) அவர்கள் போதித்த இறை நெறிக் கோட்பாடுகளும் வாழ்வியல் நெறிகளும் மக்களால் பின்பற்றப்பட்டு வந்தன. காலம் தன் போக்கில் எத்தனையோ மாற்ற திருத்தங்களை, மேடு பள்ளங்களை சமுதாய வாழ்வில் உருவாக்கவே செய்தன. ஈஸா நபி வந்த பின்னர் முந்தைய மூஸா நபியின் கொள்கைகளும் கோட்பாடுகளும் ஈஸா நபியால் செம்மைப் படுத்தப்பட்டு, சரியான வடிவில் மக்களுக்கு வழங்கப்பட்டன. பின்னர் அது கிருஸ்தவ சமயமாகப் பிற்காலத்தில் துலக்கமடையலாயிற்று. காலப் போக்கில் மாற்ற திருத்தங்கட்கு ஆட்பட்ட நிலையில் மக்களிடையே வழங்கிய இறை நெறிக் கோட்பாடுகளும் சமய வாழ்வியல் போக்குகளும் மீண்டும் சரியான வழித்தடத்தில் மீட்டமைக்கப்பட்டன. இத்தகைய மீட்டாக்க முயற்சியில் முன்னுதாரணமாக