பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47


அனைத்துச் சமய அடிப்படை
இறை வணக்கமே

உலகிலுள்ள அனைத்துச் சமயங்களும் இறை வணக்கத்தையே உயிர் மூச்சாகக் கொண்டுள்ளன. மனிதர்கள் உணர்வாலும் செயலாலும் தன்னைப்படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் இறை வணக்கம் புரிய வற்புறுத்துகின்றன. இறை வணக்கத்தை வலியுறுத்தாத சமயம் உலகில் எதுவுமில்லை.

இறை வணக்கம், உணர்வையும்
உயிரையும் பொறுத்தது

இறை வணக்க முறைகள் பல்வேறு வகைகளில் முறைகளில் அமையலாம். இறை வணக்க முறைகளில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், வணங்கப்படும் சக்தி இறைவனே. இறைவணக்கம் என்பது உடலைவிட உணர்வைப் பொறுத்த விஷயமாகும். எனவே இறை வழிபாட்டில் வணக்க முறைகளைவிட வணங்கும் தன்மைக்கே முதலிடம்.

ஆறு பலவாயினும்
சங்கமிக்குமிடம் கடலே

உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், ஹிந்துக்கள், யூதர்கள், பெளத்தர்கள் சமணர்கள், ஜொராஸ்டிரர்கள் என ஒவ்வொரு சமயத்தவரும் பல்வேறு வகையான வணக்க வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி இறை வணக்கம் புரிகின்றனர். இறைவனைப் போற்றி வணங்கும் வழிபாட்டு முறைகள் வெவ்வேறாயினும் வணங்குவது இறைவனாகவே இருப்பது கவனித்தற்குரிய தாகும். இதையே அறிஞர்களும் கவிஞர்களும் ஆறுகள் பலவாயினும் அவை இறுதியில் ஒன்று சேரும் இடம்