உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51

ஒன்று, அதை ஞானிகள் பல பெயர்களால் வழிபடுகிறார்கள் என்று ரிக்வேதம் கூறுவதாகச் சொல்வதன் மூலம் ஒரிறைக் கொள்கையை ஹிந்து சமய பழம்பெரும் வேதங்களும் போற்றுவதாக உறுதி செய்துள்ளது அறிந்தின்புறத் தக்க தாகும்.

‘இறைவன் பிறப்பு, இறப்பு அற்றவன்’
பகவத்கீதை புலப்படுத்தும் உண்மை

பகவத் கீதை மிகச் சிறந்த ஹிந்து சமய வேத நூலாகப் போற்றப்படுகிறது. போர்க்களத்தில் தளர்ச்சியுற்ற அர்ச்சுனனுக்கு வீரத்தையும் விவேகத்தையும் வளமான வாழ்க்கை நெறியையும் புகட்டும் வகையிலான கண்ணனின் உபதேசத் திரட்டே இவ்வேத நூல். இந்நூலின் 4-6வது வசனம் “கடவுள் பிறப்பு அற்றவர்” என அறுதியிட்டு உறுதிப்படக் கூறுவது இறைவனின் தன்மையை முழுமையாக உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. இதன் மூலம் இறைத்தன்மையை இறையருட் திறத்தை புலப்படுத்தும் இறைத் தீர்க்கதரிசியாகவே கண்ணன் இங்கு காணப்படுகிறார்.

அனைத்து வேதங்களும் மதங்களும் ஒரே
பரம்பொருளையே போதிக்கின்றன

கௌதம மகரிஷி வேதங்களின் சாரத்தையும் நுட்பங்களையும் நன்கு உணர்ந்து தெளிந்தவர். அவர் தன் சீடர்களுக்கு மனிதப் பிறப்பின் மகத்துவத்தைப் பற்றி உபதேசிக் கும்போது,

“ ‘ஸ்ருதி’ என்னும் தரும சாஸ்திரம் நான்கு மறைகள் (வேதங்கள்), உபநிஷதங்கள் எல்லாமே ஒரே பரம் பொருளையே குறிக்கின்றன. இதிலிருந்து எல்லா வேதங்களும் மதங்களும் உலகம் தோன்றியது முதல் அழிவுவரை