பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58



மூன்றாவதான ‘ஜகாத்’ எனும் தானதருமம் இஸ்லாத்தின் ஐம்பெரும் கட்டாயக் கடமைகளில் ஒன்றாகும். சுய சம்பாத்தியமுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் தன் சம்பாத்தியத்தில் இரண்டரை சதவிகிதம் அதாவது நாற்பதில் ஒரு பங்கு ஏழை, எளியவர்களுக்குக் கட்டாய தானமாக வழங்க வேண்டும் எனக் கட்டளையிடுகிறது.

‘ஹஜ்’ எனும் புனிதப் பயணம்

உலக மதங்கள் ஒவ்வொன்றும் தத்தம் சமயச் சார்புள்ள புனிதத் தலங்களை நோக்கி புனித யாத்திரை செல்ல வேண்டுமெனக் கூறுகிறது. புனிதப் பயணம் செல்லத் தூண்டாத, வற்புறுத்தாத சமயம் எதுவுமே பூமியில் இருப்பதாகத் தெரியவில்லை.

அதே முறையில் மற்ற சமயங்களைப் போன்றே இஸ்லாமிய மார்க்கமும் தன் ஐம்பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமையாக ‘ஹஜ்’ எனும் புனிதப் பயணம் செல்லுவதைக் கட்டாயக் கடமையாக்கியுள்ளது.

மற்ற சமயங்களின் புனிதப் பயணத்திற்கும் இஸ்லாமின் ஹஜ் கடமைக்குமிடையே மிக முக்கியமான வேறுபாடு உண்டு. பிற மதப் புனிதப் பயண நிறைவேற்றலில் நீக்குப் போக்கும் நெகிழ்வும் உண்டு. ஆனால் ஹஜ் புனிதப் பயணம் வசதியுள்ள, உடல் திறமுள்ள முஸ்லிமின் வாழ்நாள் கடமையாக இருந்தபோதிலும் அக்கடமையை செயல்படுத்த ஒரு குறிப்பிட்ட கால வரையறை உண்டு. ஒரு ஆண்டின் ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் அக் கடமையை குறிப்பிட்ட முறையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு உண்டு.

அது மட்டும் அன்று, ஹஜ் புனிதப் பயணம் செல்வோர் தம் சொந்தச் சம்பாத்தியத்தைச் செலவிட்டே செல்ல