பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

பட்டு, திருத்தப்பட்டது போன்று இறுதித் தூதர் அண்ணலாரின் வாழ்வும் வாக்கும் அணுவளவும் மாற்ற திருத்தங்கட்கு ஆளாகவில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் முந்தைய நபிமார்களின் வாழ்வும் வாக்கும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் உரியவர்களால் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. அவர்கள் மறைவுக்குப்பின் வந்தவர்களால் செவி வழிச் செய்தியாகச் சேகரம் செய்து தொகுக்கப்பட்டவைகளாகும். இதில் உண்மையும், உண்மைபோல் தோற்றமளிக்கும் பொய்மையும் புனைந்துரைகளும் தொகுப்பாளனின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும் அத்தொகுப்பில் இடம் பெறுவது தவிர்க்கவியலாத ஒன்றாகும்.

மறு உருவெடுத்த தெளராத் வேதம்

புக்தநஸர் எனும் மன்னர் ஜெரூசலம் (பைத்துல் முகத்தஸ்) மீது மேற்கொண்ட போரின்போது மோசஸ் எனும் மூஸா (அலை) அவர்கட்கு இறைவன் வழங்கிய ‘தெளராத்’ எனும் வேதத்தின் பிரதிகள் யாவும் எரிந்து போயின. அப்போது யூதர்கள் அனைவரும் பாபல் நகரச் சிறைகளில் கைதிகளாக அடைக்கப்பட்டுக் கிடந்தனர். சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்தபோது அவர்களிடம் தெளராத் வேதப் பிரதிகள் எதுவும் இல்லாத நிலை.

தெளராத் வேதம் இருந்த இப்ரானி மொழியை அன்றிருந்த யூத சந்ததியினர் அறிந்திருக்கவில்லை. இத்தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு இஜ்ரா எனும் பெரியார் இப்ரானி மொழி கலந்திருந்த கில்தானி எழுத்துகளைக் கொண்டு புதிதாகத் தெளராத் வேதத்தை வரையலானார். இதுவே பிற்காலத்தில் தெளராத் வேதத்தின் நகலாகக் கருதப்படலாயிற்று. இதில் பல செய்திகள் புதிதாக இணைக்கப்பட்டன. சுருங்கக் கூறின் தெளராத்