பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61

வேதத்தின் சாயலில் பெரியார் இஜ்ராவினால் ஒரு புதிய மதமே உருவாக்கப்பட்ட தெனலாம். அப்புதிய தெளராதில் ‘மூஸா (அலை) 120 வயதில் மரணித்தார்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளதிலிருந்து இது மனிதர்களால் வரையப்பட்ட வேதம் என்பது தெளிவாகிறது. மூஸா (அலை) அவர்கட்கு இறைவனால் வழங்கப்பட்ட வேதத்தில் அவரின் இறப்பும் வயதும் இடம்பெற இயலாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும். பெரியார் இஜ்ராவை மூஸா (அலை) அவர்களால் அறிமுகம் செய்த யூத சமயத்தைப் புனர் நிர்மாணம் செய்தவர் என்ற முறையில் இரண்டாம் ஸ்தாபகராக யூத சமய மக்களால் போற்றப்படுகிறார்.

புனிதர் பவுல் தொகுத்த விவிலிய புதிய ஏற்பாடு

இறை மார்க்க நெறி பிறழ்ந்த பனி இஸ்ரவேலர்களைத் தடுத்தாட்கொண்டு இறைவழி திருப்ப, இறைவனால் அனுப்பப்பட்ட இறை தூதரே ஈஸா (அலை) எனும் இயேசு கிருஸ்து. இதை அவரே கூறியதாக,

“நான் திருச்சட்டத்தையோ இறைவாக்கையோ அழிக்க வந்துள்ளேன் என எண்ண வேண்டாம். தெளராத் எனும் வேதத்தை மட்டும் நிலைநிறுத்துவதற்காகவே தோன்றியிருக்கிறேன்.” (மத்தேயு 5:17)

என விவிலியம் தெளிவாக்குகிறது.

இறைவன் ஈஸா (அலை) மூலம் மனித குலத்துக்கு வழங்கிய நற்செய்திகளான வேத வசனங்களில் பலவற்றையும் சில ஆண்டுகட்குப் பின்னர் ஈசா (அலை) அவர்களின் சீடர்கள் மொழிந்ததைத் துணைக் கொண்டு புதிய ஏற்பாட்டை தொகுத்தளித்தவர் புனித பவுல் அவர்களாவர். ஈஸா (அலை) அவர்களின் வாழ்வும் வாக்கும் அவர்கள்