பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

ஆத்மாவிலிருந்து உற்பத்தி செய்தான் (ஆரம்பத்தில் அந்த ஒருவரைப் படைத்து), அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு, அவ்விருவரிலிருந்து அநேக ஆண், பெண்களை (வெளிப்படுத்தி) பரவச் செய்தான். ஆகவே, அந்த அல்லாஹ்வுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவனைக் கொண்டே (நீங்கள் உங்களுக்குள்) ஒருவருக்கொருவர் (வேண்டியவற்றை) கேட்டுக் கொள்கின்றீர்கள். இன்னும், (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்தக் கலப்பு பந்துவத்திற்கும் (மதிப்பளியுங்கள்) நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கின்றான்” (திருக்குர்ஆன் 4:1).

இந்த இறைவாக்கின் அடிப்படையிலேயே யுனெஸ்கோவின் இனவாதக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என்பது இங்குக் கவனிக்கத்தக்கதாகும்.

உலகெங்கும் ஒரே மூலத்திலிருந்து உருவாகிப் பல்கிப் பெருகியிருக்கும் மனிதகுலம் பல்வேறு இனங்களாக, நிறத்தவர்களாக, மொழியினராக, பழக்க வழக்கங்களைக் கொண்டவர்களாக இருப்பது அழகிய மலர்த் தோட்டத்தில் காணும் பல்வேறு வகையான நிறப் பூச்செடிகளையும் அவற்றின் பன்னிற மலர்களிலிருந்து வெளிப்படும் வெவ்வேறு வகையான மணங்களைப் போன்றதாகும். இத்தோட்ட மலர்கள் ஒவ்வொரு வகையில் ஒவ்வொன்றும் சிறந்ததேயன்றி, அவற்றில் எந்த வண்ண மலரும் நறுமணப் பூக்களும் ஒன்றைவிட மற்றொன்று சிறந்ததெனக் கூறுவதற் கில்லை. மாலைக்கு வனப்பூட்டும் வண்ண மலர்களே மனித இனங்கள். இதையே திருமறை.

“மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர் ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு உங்களைக் கிளை