பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79

தாங்களாக முன்வந்து இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று முஸ்லிம்களாகிய போதும்கூட, பெருமானாரை வளர்த்து ஆளாக்கிய அவரது பெரிய தந்தையார் அபூத்தாலிப் இஸ்லாமிய மார்க்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டாரில்லை. என்றும்போல் முந்தைய சிலை வணக்கச் சமயத்திலேயே இருந்து வந்தார்.

எண்பது வயதை எட்டிய அவரை இறப்பு நெருங்கி விட்ட நிலையில், படுத்தபடுக்கையாகக் கிடக்கும் தன் பெரிய தந்தை அபூத்தாலிபின் அருகே அமர்ந்திருக்கும் அண்ணலார் விரும்பியிருந்தால் சிறிது வற்புறுத்தி இறுதி நேரத்திலேனும் இஸ்லாத்தில் இணையச் செய்திருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்வது இறைநெறிக்கு - இஸ்லாமிய மார்க்கத்துக்கு - இறை வாக்குக்கு நேர்மாறான செயலாக அமைந்து விடும் எனக் கருதிய பெருமானார் தன் பெரிய தந்தை அபூத்தாலிபை கடுகளவும் வற்புறுத்த அல்லது அத்தகு சூழலை உருவாக்க சிறிதும் முயன்றாரில்லை. அபூத்தாலிப் இறுதிவரை இஸ்லாத்தை ஏற்காமல், முஸ்லிம் ஆகாமல் முந்தைய சிலை வணக்கச் சமயத்தவராகவே உயிர் நீத்தார் என்பது வரலாறு.

இவ்வாறு, தன் நெருங்கிய உறவினர்களை அணுக்கமாக இருந்தவர்களையே வற்புறுத்தாத, எக்காரணம் கொண்டும் நிர்ப்பந்திக்காத மார்க்கம்தான் இஸ்லாம் என்பதைச் சொல்லால் அல்லாமல் செயலாலும் உலகுக் குணர்த்தியவர் பெருமானார் (சல்) அவர்கள்.

அவரவர் சமயம் அவரவர்க்கு

எந்தவொரு சமயத்தைச் சார்ந்தவர்களும் அவரவர் சமயங்களைப் பேணி ஒழுக வேண்டுமே தவிர, ஒரு சமயத்தைச் சார்ந்தவர் மற்றவர் சமய வழியில் குறுக்கிடு வதை இஸ்லாம் அறவே வெறுக்கிறது. அவரவர்