பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85



என்ற திருமறை வசனங்களை திருக்குர்ஆனிலிருந்து அப்படியே அவர்களிடம் ஓதிக் காட்டினார். பிற சமயங்களை மதிப்பதோடு அச்சமய ஆலயங்களையும் பாதுகாக்கவும் பணித்த திருமறை வாசகங்களும் அவற்றிற்கேற்ப செயல்பட்ட கலீஃபா உமர் (ரலி) அவர்களின் சமயப் பொறையுணர்வும் இன்றும் நமக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக விளங்குகின்ற பான்மை என்றும் நினைந்தின் புறத்தக்கதாகும்.

இங்கு ஆழ்ந்து கவனிக்க வேண்டிய மிக நுட்பமான மற்றொரு பயன்மிகு செய்தியும் உள்ளது. கிருஸ்தவ குருமார்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க இரு மாதா கோயில்களில் ஏதாவதொன்றில் உமர் (ரலி) தொழுகை நடத்தினால், அதைக் காரணம்காட்டி, பின்னால் வரும் முஸ்லிம்கள் ‘உமர் (ரலி) தொழுத தொழுகைத் தலம்’ என உரிமை பாராட்டி மசூதி கட்ட முனைந்தால் மாதா கோயில் பாதிக்கப்பட்டு விடலாம். அதற்கு எக்காரணம் கொண்டும் இடம் தந்து விடலாகாது என்ற முன்னெச்சரிக்கை உணர்வோடும், எதற்காகவும் பிற சமயத்தினர் பாதிப்புக்கு ஆளாவதை முற்றாகத் தவிர்க்க வேண்டும் என்ற முன்னுணர்வும் இங்கு அரகோச்சுவதைக் காண முடிகிறது.

பிற சமய எதிரிகளை எதிர்கொண்ட பெருமானார்

நபிகள் நாயகம் (சல்) அவர்கள், இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்ய முனைந்தபோது தன்னைப் பெரும் எதிரியாக எண்ணி மிகக் கேவலமாக நடத்திய பிற சமயத்தவர்களை பெருமானார் மக்காவை வெற்றி கொண்ட பின்னர், மாற்று மதத்தவரை எவ்வாறு நடத்தினார் என்பதை, அண்ணலாரின் வாழ்க்கை வழி அறிவதன்மூலம் ‘அழகிய முன்மாதிரி’ யான அவர்தம் வாழ்வும் வாக்கும் மாற்றுச் சமயத்தவரிடம், ஒரு முஸ்லிம் எம்முறையில் நடந்து