பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

இனிய உரத்த குரலில் விடுக்கிறார். அப்போது முஸ்லிமல்லாத குறிப்பிட்ட பெருந் தலைவர்களும் அங்கே குழுமி நிற்கின்றனர். அவர்களில் அத்தாப் இப்னு ஆசீத் என்பவர் குறிப்பிடத்தக்க தலைவர். பிலால் (ரலி) அவர்களின் தொழுகை அழைப்பைக் கேட்ட மாத்திரத்தில், தன் அருகே நின்று கொண்டிருந்த தன் நண்பரின் காதுகளில் “நல்லவேளை என் தந்தையார் மறைந்து விட்டார். அவர் உயிரோடு இன்று இருந்திருந்தால், இந்தக் கருங்குரங்கு (பிலால்) ‘காபா’ இறையில்லக் கூரை மீது நின்று தொழுகை அழைப்பு விடுப்பதைக் காணச் சகித்திருக்க மாட்டார்.” என்று கிசுகிசுத்தார்.

அண்ணலார் இமாமாக இருந்து ‘லுஹர்’ தொழுகையை நிறைவேற்றினார். அதன்பின், அங்கே குழுமி நின்று கொண்டிருந்த முஸ்லிமல்லாத சிலை வணக்கச் சமயத்தைச் சார்ந்த மக்காக் குறைஷியர்களை நோக்கி,

‘என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?’ எனக் கேட்டார்.

இதைக் கேட்டபோது குறைஷிகள் நாணத்தால் வெட்கித் தலை குனிந்தனர். தாங்கள் எதையும் வாய் திறந்து கேட்க தகுதியற்றவர்கள் என்ற எண்ணத்தில் மெளனமாக நின்றனர். அந்த நிலையில் பெருமானார் (சல்) விரும்பியிருந்தால் இருபதாண்டுகளுக்கு மேலாக தனக்குத் துன்பமும் துயரமும் இடையறாது தந்து, வருத்தி வாட்டிய வேற்றுச் சமய விரோதிகள் அனைவரையும் சிரச்சேதம் செய்ய ஆணையிட்டிருக்க முடியும். மக்காவாசிகளாகிய அம் மாற்றுச் சமயத்தினரின் சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்திருக்க முடியும். தன் அதிகாரத்தின் மூலம் அவர்கள் அனைவரையும் அடிமைகளாக ஆக்கியிருக்க