பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

103

கொண்ட அவரது அடியார்கள் ஏசுவையே கர்த்தராகக் கொண்டு ஆராதிக்க முற்பட்டனர். இதைக் கண்டு வெகுண்ட ஏசுவாகிய ஈசா (அலை) என்னை வணங்காதீர்கள். வணங்குதற்குரிய இறைவனாகிய கர்த்தரையே வணங்குங்கள் என்று பணித்ததாக இறைவேதமாகிய 'இன்ஜில்' எனும் பைபிள் கூறுகிறது.

"பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செயல்படுகிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பவனேயல்லாமல், என்னை (இயேசுவை) நோக்கி “கர்த்தரே கர்த்தரே!” என்று சொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.”

(மத்தேயு 7: 21)

இதினின்று ஏசு இறைவனாகிய கர்த்தரைத் தவிர்த்து வேறு யாரையும் இறைவன் எனக் குறிப்பிடுவதை ஈசா (அலை) அறவே விரும்பவில்லை எனத் தெளிவாகிறது. எனினும், கிருஸ்தவ மக்கள் இயேசுவாகிய ஈசா (அலை) அவர்களை இறைவனாக வணங்கி மகிழ்வதை எங்கும் காண்கிறோம்.

இவ்வாறு ஒரே இறைவனை வணங்கப் பணித்தவர்களே இறைவனாக்கப்பட்டார்கள். அதற்கேற்ப இறை வேதங்களிலும் விருப்பு, வெறுப்புகளுக்கேற்ப மாற்ற திருத்தங்களை உருவாக்கி மூல வேதத்தைத் தடம் புரளச் செய்து மாசுபடுத்தினார்கள். எனவே, மூல வடிவிலேயே மீண்டும் இறை வேதமும் அதனை உள்ளது உள்ளவாறே விளக்கிச் சொல்ல நபியும் இறைவனால் அனுப்பப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

அன்புப் பெருக்கால் நபிமார்களின் கொள்கைகள் எவ்வாறு அவர்களைப் பின்பற்றுபவர்களின் மதிப்பு மரியாதையினால் மூலக் கொள்கைகள் முடமாக்கப்பட்டன என்பதை ஒரு சிறுகதை மூலம் விளக்கினால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும் எனக் கருதுகிறேன்.