பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

ஒரு ஊர் வளமான பகுதியாக இருந்தும் அவ்வூரில் வறுமை கோலோச்சிக் கொண்டிருந்தது. காரணம், நேரத்தைக் கணித்தறிய எந்தக் கருவியும் அப்போது கண்டு பிடிக்கப்படாததால், நேரத்தை பிரித்து, ஒழுங்காகத் தங்கள் வேலைகளைச் செய்து முடிக்க இயலாதவர்களாக இருந்தார்கள். இதனால் எங்கும் குழப்பம்; எதிலும் தாமதம்.

இந்தச்சமயத்தில் அவ்வூரைச் சார்ந்த பெரியவர் ஒருவர் நீண்ட தூரத்துக்கு அப்பால் இருந்த ஒரு ஊருக்குச் சென்றிருந்தார். அங்கே எல்லாக் காரியங்களும் முறையாகவும் நேரப்படியும் செய்யப்பட்டன. எதிலும் குழப்பமில்லை. எல்லாமே சிறப்பாக நடைபெற்று வந்ததால் அங்குள்ளவர்களின் சக்தியோ நேரமோ கொஞ்சமும் வீணாகாமல் பயனடைந்து வந்தன. இதனால் மகிழ்ச்சியும் செழிப்பும் மக்கள் வாழ்வில் மேலோங்கி நின்றன.

இதற்கெல்லாம் என்ன காரணம் என ஆர்வத்தோடு வந்தவர் ஆராயலானார். அப்போதுதான் அந்த இரகசியம் அவருக்குத் தெரிய வந்தது.

அவர்கள் நேரத்தைப் பகுத்துக் காட்டும் ('சூரியக் கடிகை') 'சன் டயல்' எனும் நேரங்காட்டும் கருவியைக் கண்டுபிடித்திருந்தார்கள். சூரியோதயத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரை, சூரிய ஒளிபடும் முறையில் நீளமான அந்தக் கருவியை வைத்து விட்டால், அக் கருவிக்கு அருகில் விழும் நிழலின் நீளத்தைக் கொண்டு நேரத்தை அனுமானிக்க முடியும். இதனால் அந்தந்த நேரத்தில் அந்தந்த வேலையை முடிக்க முடிந்தது.

இதைக் கண்டு வியந்த வெளியூர்க்காரர் இதே போன்ற கருவியை தன் ஊருக்கும் வாங்கிச் சென்றால் அங்குள்ளவர்கள் நேரமறிந்து வேலை செய்ய முடியுமே. இதனால் வீணான குழப்பங்கள் நீங்க ஊர் மக்கள் வாழ்வில் ஒழுங்கும் மகிழ்ச்சியும் உருவாகுமே என்ற எண்ணத்தில் அப்படிப்-