பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இஸ்லாம்

ஆன்மீக மார்க்கமா,

அறிவியல் மார்க்கமா?

ஈமான் அமைப்பின் சார்பில் துபாய் பெரிய பள்ளியில் நடைபெறும் இம்மீலாது விழாவில் நான் பெருமகிழ்வோடு கலந்து கொள்ள இருபெரும் காரணங்கள் உண்டு. முதற்காரணம் துபாய் நாட்டைப் பற்றி எனக்கு எப்போதும் ஒரு மரியாதை கலந்த மதிப்பு உண்டு. நான் துபாய் நாட்டிற்குப் புதியவன் அல்ல; ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லுகின்றபோதும், ஐரோப்பிய நாடுகளிலிருந்து தாயகம் திரும்புகின்றபோதும், சிலபோது 'உம்ரா' செய்து திரும்புகிறபோதும் இந்தத் துபாய் மண்ணிலே இரண்டொரு நாட்கள் தங்கி, நண்பர்களையெல்லாம் சந்தித்து, அளவளாவி மகிழ்ந்து செல்வது வழக்கம். ஆனால் இது போன்ற பெருங்கூட்டங்களிலே உரையாற்றுகின்ற வாய்ப்பை இதுவரைப் பெற்றேனில்லை.

சமய, சமூக நல்லிணக்கத்துக்கோர் சவால்!

அமீரகத் துபாயைப் பற்றி மிக உயர்வான எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. இது ஒரு இஸ்லாமிய நாடாக