பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

115

காகவாவது ஓரளவு ஆடம்பர உடையணிந்து பேட்டி தரக் கூடாதா? எனத் தனக்குத் தானே கேட்டுக் கொள்வார்.

ஒரு நாள் பெருமானார் தன் வீட்டில், வழக்கமான கட்டிலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது, நீண்ட நாளாகத் தன் உள்ளத்தை அரித்து வரும் உணர்வை, எண்ணத்தை வினா வடிவில் வள்ளல் நபிகள் நாயகம் அவர்களிடம் கேட்கலானார்.

மற்ற சமயங்களில் எப்படியிருந்தாலும் பரவாயில்லை. மன்னர்களும் மற்றவர்களும் காண வரும்போதாவது ஓரளவு நல்ல உடைகளை அணிந்து, வருபவர்களுக்கு காட்சி தந்தால், காண்பதற்கு நன்றாக இருக்குமே. வரும், மன்னர்களுக்கும் உவப்பாக இருக்குமே என்ற முறையில் உமர் (ரலி) அவர்களின் பேச்சு அமைந்தது. உமர் (ரலி) அவர்களின் உட்கிடக்கையை உய்த்துணர்ந்து கொண்ட பெருமானார், புன்சிரிப்புப் பூத்தவராக உமர் (ரலி) அவர்களை உவப்புடன் நோக்கி 'உமர் அவர்களே! இறைவன் எப்போதும் எளிமையையே விரும்புகிறான். எளிமையாக வாழுபவர்களுக்கு எண்ணற்ற வெகுமதிகளை அளிக்கிறான். எளிமையாக வாழ்வோரே சுவர்க்கத்தில் எளிதாக நுழைய முடியும். அங்கு அவர்கட்கு விரும்புவனவெல்லாம் கிடைக்கும். அத்தகைய சுவர்க்கப் பரிசுகள் எனக்குக் கிடைப்பதை தாங்கள் விரும்பவில்லையா, உமர் அவர்களே!' என்று எதிர்வினா எழுப்பிய போது, உமர் (ரலி) அவர்கட்குத் தெளிவாகப் புரிந்தது எளிமை வாழ்வு எத்தகைய வெகுமதிகளை தேடித்தர வல்லது என்பது. தன் ஆடம்பர உணர்வு எவ்வளவு தவறானது என்பதும் உமர் (ரலி) அவர்கட்கு தெளிவாகியது.

எளிமை ஆட்சியர்க்கு அணிகலன்

எந்த அளவுக்கு எளிமையாக வாழ வேண்டும் என்பதையும் அரசுப் பொறுப்பில் இருப்பவர்கள் எந்த அளவுக்கு ஆடம்பர வாழ்வு நீங்கி, அரசுப் பணத்தை எந்த