பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

அளவுக்குச் சிக்கனமாகப் பயன்படுத்தி வாழ வேண்டும் என்பதற்கும் பெருமானாரின் பெரு வாழ்வில் பல எடுத்துக் காட்டுகளைக் காண முடிகிறது. அவைகளில் ஒன்றை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

இன்று ஆட்சி, அதிகாரம் என்றாலே எவ்வளவு சுருட்டலாம், எத்தகைய ஆடம்பர வாழ்வை அரசுச் செலவில் அனுபவிக்கலாம். எத்தனை தலை முறைக்குச் சொத்து சேர்க்கலாம் என்பதிலேயே இன்றைய ஆட்சியாளர்கட்குச் சிந்தனை சென்று கொண்டிருக்கிறது. ஆனால், ஆட்சிக் கட்டிலில் அமர்பவர்கள் எம் முறையில் எளிமையாக, சிக்கனமாக மற்றவர்கட்கு எடுத்துக்காட்டாக வாழ வேண்டும் என்பதற்கு வள்ளல் நபி வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைச் சான்றாகச் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நாயகத் திருமேனி அவர்கள் மக்கா நகரை வெற்றி கொண்ட நேரத்தில் அதற்கு ஆளுநராக ஒருவரை நியமிக்க வேண்டிய அவசிய, அவசரமேற்பட்டது. அப்போது அவர்கள் மனதில் இப் பதவிக்கு எல்லா வகையிலும் ஏற்றவராகத் தோற்றமளித்தவர் அத்தா இப்னு ஆசீத் என்பவராவார். மக்கா வெற்றி நேரம்வரை அண்ணலாரின் எதிரியாக இருந்தவர். இருப்பினும் அத்தா இப்னு ஆசீத் அவர்களின் வீரத்திலும் நேர்மையிலும் பெருமானார் பெருமதிப்புக் கொண்டிருந்தார். மக்கா வெற்றிக்குப்பின் இஸ்லாத்தில் இணைந்த அவரை அழைத்த அண்ணலார் அவரை மக்கா ஆளுநராக நியமிக்கவிருக்கும் செய்தியை வெளிப்படுத்தாமலேயே அவரை நோக்கி 'அத்தா இப்னு ஆசீத் அவர்களே! உங்களுக்கு ஒரு நாள் வாழ்க்கைச் செலவுக்குக் குறைந்தபட்சம் எவ்வளவு தேவைப்படும்?' என்று வினவினார். எதற்காக இப்படியொரு கேள்வியைத் திடுமெனப் பெருமானார் கேட்கிறார் என்பது புரியாமலே, ‘அண்ணலார் அவர்களே! என் ஒருநாள் வாழ்க்கைச்