பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

117

செலவுக்கு ஒரு திரஹம் இருந்தால் போதும், சமாளித்துக் கொள்வேன்' எனக் கூறினார்.

இதைக்கேட்ட நாயகத் திருமேனி அவர்கள் 'உங்களை மக்கா நகரின் ஆளுநராக நியமிக்கிறேன். நீங்கள் உங்கள் வாழ்க்கைச் செலவுக்காக ஒரு நாளைக்கு ஒரு திரஹம் வீதம் அரசுக் கருவூலத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இதுதான் உங்களுக்குரிய சம்பளம்' எனக் கூறி நியமித்ததாக வரலாறு கூறுகிறது.

இந்தப் பேருண்மையை அறிந்த, இஸ்லாமிய நெறி வழுவா பெரு வாழ்வு வாழ்ந்த அவ்ரங்கஸீப் ஆலம்கீர் இதனினும் மேம்பட்ட முறையில் வாழ்ந்து காட்டிய வாழ்க்கைச்சுவட்டை அவர் வாழ்விலே நாம் காண்கிறோம்.

தன் தனிப்பட்ட வாழ்க்கைக்காக அரசுக் கருவூலத்தில் அரைக்காசும் எடுத்துப் பயன்படுத்தாது, தொப்பி தைத்தும், திருக்குர்ஆனுக்குப் படியெடுத்தும் அவற்றை ஆள் மூலம் மக்களிடையே விற்கச் செய்து, அதிலிருந்து வரும் வருவாயைக் கொண்டே தன் தனிப்பட்ட வாழ்வின் தேவைகளை நிறைவு செய்து கொண்டார். இதுதான் இஸ்லாமியக் கொள்கை. அண்ணலார் புகட்டிய வாழ்வியல் நெறி. அரசுச் சொத்தை, மக்கள் வரிப்பணத்தைத் தங்கள் சொத்தாகக் கருதி அவைகளைச் சுரண்டிக் கொழுக்கவே, மக்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியிருப்பதாகக் கருதிச் செயல்படும் ஊழல் அரசியல்வாதிகள் கட்டாயம் அறிந்துணர வேண்டிய செய்தி. அரசுப் பதவியிலுள்ளவர்கட்கு இயல்பாகவே ஆடம்பர மோகம் அதிகம். அதிலும் அரசியல்வாதிகள் ஆட்சிக் கட்டிலில் அதிகாரத்தோடு அமரும்போது, தங்கள் கடந்த கால வாழ்வை எண்ணிப் பார்க்காதவர்களாக, ஒரு மட்டத்திற்குமேல் உயர்வாக வாழக் கூடியவர்களாக, வாழ வேண்டியவர்களாக ஆக்கிக் கொள்கிறார்கள். இத்தகைய ஆடம்பர வாழ்விற்குத் தேவைப்படும் பணத்தைத் தங்கள் அதிகார துஷ்பிரயோகம் மூலம் பெற