பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

இருந்த போதிலும் சமய, சமூக நல்லிணக்கத்துக்கு மிகச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாக அமீரகத் துபாய் நெடுங்காலமாக விளங்கி வருகிறது. இங்கே வாழுகின்ற, தொழில் செய்கின்ற மக்களில் பெரும் தொகையினர் பல்வேறு நாடுகளைச் சார்ந்தவர்கள்; பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள்; பல்வேறு சமயச் சார்புள்ளவர்கள்; பல்வேறு மொழிகளைப் பேசுபவர்கள்; பல்வேறு பண்பாடுகளை, நடையுடை பாவனைகளைப் பேணி நடப்பவர்கள். இவர்களெல்லாம் ஒருங்கிணைந்து வாழக் கூடிய இனியதோர் சூழ்நிலையைத் துபாய் நாடு ஏற்படுத்திக் கொடுத்திருப்பது, இஸ்லாத்தினுடைய சமய, சமூக நல்லிணக்கக் கொள்கைகளின், மனிதநேய நல்லிணக்கக் கோட்பாடுகளின் அடையாளச் சின்னமாகவே இந்நாட்டைக் காண்கின்றேன். ஈமான் அமைப்பின் இணையிலாப் பணி இரண்டாவது காரணம். இந்த விழாவை இனிது நடத்திக் கொண்டிருக்கும் ஈமான் அமைப்போடு நான் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்காவிட்டாலும், இவ்வமைப்பு நீண்ட காலமாக ஆற்றிவரும் அரும்பணிகளைப்பற்றி நான் நன்கறிவேன். 1978இல் நான் முதன் முறையாக இத்துபாய் மண்ணில் கால் வைத்த போதிருந்தே இந்த அமைப்பைப் பற்றி, அது ஆற்றி வருகின்ற இஸ்லாமியப் பணிகளைப்பற்றி நான் மிகத்தெளிவாகவே அறிவேன்.

இஸ்லாமிய மார்க்கத்துக்கு மட்டுமல்ல; இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்தவர்களின் நலத்துக்காகவும் இந்த அமைப்பு அரும்பாடுபட்டு வருவதை நான் நன்கறிவேன். இஸ்லாமிய அறிஞர்களின், அவர்தம் திரண்ட சக்திகளையெல்லாம் ஒன்றாகத் திரட்டி, அவற்றை ஒருமுகப்படுத்துவதில் தனி வரலாறு படைத்து வருகிறது. சமுதாயத்தில் எழுச்சியோடு வாழத்துடிக்கின்ற, கல்வி கற்க வாய்ப்பில்லாமல் துவண்டு கிடக்கின்ற இளைஞர்களையெல்லாம் உசுப்பி, அவர்கட்கு உதவி செய்கின்ற முறையில் பல வழிகளில் பல பயனுள்ள திட்டங்களைத் திறம்பட நிறை