பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

வழிவகைகளைத் தேடி, தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொள்ள முனைகிறார்கள். இதற்குரிய ராஜபாட்டையாக அமைவது லஞ்ச லாவண்யமாகும்.

‘கைக்கூலி' தரும் கடுந்தண்டனை

அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, சட்ட விதிமுறைகளைப் புறக்கணித்து, சலுகை முறையில் காரியங்களைச் சாதித்துக் கொள்ள சட்டவிரோதமாகப் பெறும் லஞ்சமாகிய கைக்கூலியைப் பெறுபவர்கள் சமூக விரோதச் செயல் செய்தவர்களாவர். இதனால் முறைப்படி பலன் அடைய வேண்டியவர்கள் பலன்பெற இயலாமல் போய்விடுகிறது.

இத்தகைய சமூக விரோதச் செயலான 'லஞ்சம்’ எனும் கைக்கூலி பெறுபவர் நரகில் எத்தகைய இறை தண்டனையைப் பெறுகிறார்கள் என்பதை ஆலிப் புலவர் எழுதிய ‘மிகுராஜ் மாலை' எனும் இஸ்லாமிய இலக்கியம் மிகச் சிறப்பாக ஒரு காட்சி மூலம் விளக்குகிறது. மிகுராஜ் இரவன்று ஜிப்ரீல் (அலை) அவர்களோடு விண்ணுலகு சென்ற நபிகள் நாயகம் (சல்) அவர்கள் சொர்க்க, நரகங்களையெல்லாம் சுற்றிப் பார்த்து வருகிறார்கள். நரகப் பகுதியைச் சுற்றிப் பார்த்து வரும்போது ஒரு மனிதன் தடிகொண்டு பலமாகத் தாக்கப்படுகிறான். அடுத்தடுத்து தலையில் விழும் அடிகளால் தலை வீங்குகிறது. வீங்கிய தலையை நெருப்புப் பிழம்புபோல் தோற்றமளிக்கும் அம்மியில் வைத்து, அரைக்கிறார்கள். இக் காட்சியைக் காணும் பெருமானார் உள்ளம் பதைக்கிறது. ஜிப்ரீல் (அலை) அவர்களை நோக்கி 'இம்மனிதரை ஏன் இப்படி வதைக்கிறார்கள். இப்படியொரு கொடிய தண்டனை அனுபவிக்க என்ன பாவம் செய்துள்ளார்' எனக் கேட்க, அதற்கு விடை கூறவந்த ஜிப்ரீல்(அலை) அவர்கள் 'இம் மனிதர் சாதாரண பாவம் செய்யவில்லை. கைக்கூலி வாங்கிய குற்றத்தைச் செய்தவன். அதற்குரிய