பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

125

இறுதிக் கடமையை நிறைவேற்றாத
இந்திய முஸ்லிம் மன்னர்கள்

அது மட்டுமல்ல அறுநூறு ஆண்டுகாலம் இந்திய மண்ணை ஆட்சி செய்த முஸ்லிம் மன்னர்களில் பெரும்பாலோர் முழுமையான முஸ்லிம்களாக, இஸ்லாமியக் கடமைகளை முழுமையாக நிறைவேற்றியவர்களாக இருந்திருக்கவில்லை என்பது ஒரு கசப்பான உண்மையாகும். அவ்ரங்களிபீப் ஆலம்கீர் உட்பட எந்த முஸ்லிம் மன்னரும் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ் கடமையை ஒருபோதும் நிறைவேற்றியதில்லை. இந்நிலையில் மக்களை இஸ்லாமிய நெறியின் பால் ஈர்க்க அல்லது ஆட்சியதிகாரத் துணையுடன் வாள் கொண்டு முஸ்லிம்களாக மத மாற்றம் செய்யப்பட்டனர் என்பது எப்படி பொருந்தும். இதுவொரு வரலாற்றுப் புரட்டு ஆகும்.

இன்னும் இவ்விஷயத்தை நடைமுறைச் சிந்தனையோடு அணுகி ஆராய்ந்தால் மேலும் தெளிவேற்படும். நாடு விடுதலை பெறும்வரை காஷ்மீரை ஆண்டு வந்தவர் ஒரு ஹிந்து மன்னர். ஆனால், காஷ்மீர் மக்களில் மிகப் பெரும்பாலோர் முஸ்லிம் மக்கள்!

இன்றும்கூட கேரள மாநிலத்தில் கணிசமான பெருந் தொகையினராக வாழ்பவர்கள் முஸ்லிம் மக்கள். ஆனால், அங்கு எக்காலத்திலும் ஹிந்து மன்னர்கள் ஆட்சி மட்டுமே நடந்து வந்ததே தவிர, எந்த முஸ்லிம் மன்னரும் எந்தவொரு கேரளப் பகுதியையும் ஆண்டு வந்ததாக வரலாறே இல்லை. திப்பு சுல்தான்கூட கள்ளிக்கோட்டை வரை படையெடுத்துப் போனாரே தவிர, எந்த வெற்றியும் அடையாமல் திரும்பி விட்டார் என்பதுதான் வரலாறு.

இவ்வாறு முஸ்லிம்களின் ஆட்சியே இல்லாத காஷ்மீரிலும் கேரளத்திலும் யார் வாளால் இஸ்லாத்தைப்