பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

பரப்பினார்கள்? அப் பகுதி மக்களை முஸ்லிம்களாக யார் வாளால் கட்டாய மத மாற்றம் செய்தார்கள்.

எனவே, இந்தியாவில் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்பது ஆதாரமே இல்லாத, திட்டமிட்டுக் கட்டிப் பரப்பப்படும் மிகத் தவறான பிரச்சாரம்.

இன்னும் சொல்லப்போனால் பிற மதத்தவரை மதிப்பதில், மத நல்லிணக்கத்தோடு பழகுவதில் முஸ்லிம்களுக்கு ஈடு யாரும் இல்லையென்று சொல்லுவதற்கு வரலாற்றில் ஏராளமான சான்றுகள் உள்ளன.

ஏகத்துவக் கொள்கையின் பிறப்பிடம் இந்தியா

அது மட்டுமல்ல, இந்திய மண்ணின், குறிப்பாகத் தமிழ் மண்ணின் மூல இறைக் கொள்கை என்ன என்று தெரியுமா? 'ஒரே இறைவன்' என்பதைக் குறிக்கும் ஏகத்துவக் கொள்கைதான் அடிப்படை இறைக் கொள்கையாக ஆரம்பத்தில் இருந்தது என்பதை நபிகள் நாயகம் (சல்) அவர்களே தெளிவாக விளக்கிக் கூறிச் சென்றுள்ளார்கள்.

பெருமானார் அவர்கள் இறையில்லமாகிய கஃபத்துல்லாவை வலம் வந்த பின்னர் 'ருக்னுல் ஹிந்த்' எனும் ஹிந்துஸ்தானத்தை நோக்கியிருக்கும் மூலைப் பகுதியில் ஹிந்துஸ்தானத்தை நோக்கி நிற்பார்கள். அப்போது தன் சட்டையின் மார்புப் பகுதியை விலக்கி வெறும் நெஞ்சை ஹிந்துஸ்தானத்தை நோக்கியவாறு காட்டிக் கொண்டு நிற்பது வழக்கம். அப்போத அவர்களின் முகம் மலர்ச்சி பெறும், புளகாங்கித உணர்வு பொங்க நிற்பார்கள்.

அண்ணலார் இவ்வாறு நிற்பதற்கும் பெரு மகிழ்வடைவதற்கும் என்ன காரணம் என்பது அங்குள்ள யாருக்கும் தெரியவில்லை. அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் சஹாபிகள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே வந்தது.