பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

127

ஒரு நாள் பெருமானார் (சல்) அவர்கள் மார்புச் சட்டையைத் திறந்து வைத்தவாறு இன்ப உணர்வோடு மலர்ந்த முகத்துடன் ஹிந்துஸ்தானத்தை நோக்கி நின்றபோது, ஒரு சஹாபி “நாயகமே நீங்கள் மகிழ்ச்சிப் பெருக்கோடு இவ்வாறு நிற்பதற்கு சிறப்புக் காரணம் ஏதேனும் உண்டோ?” எனத் துணிந்து கேட்டு விட்டார். இதைக் கேட்ட பெருமானார் (சல்) அவர்கள் "ஹிந்துஸ்தானத்தை நோக்கி நான் இவ்வாறு நிற்கும்போது, ஏகத்துவக் கொள்கையின் விளைநிலமான ஹிந்துஸ்தானத்திலிருந்து வீசும் தென்றல் காற்று, என் நெஞ்சில்படும்போது எனக்கு இதமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அந்த இன்ப உணர்வை அனுபவிக்கத்தான் நான் இவ்வாறு இங்கு நின்று கொண்டிருக்கிறேன்” எனக் கூறினார்கள் என்று சொல்லப்படுகிறது. இதிலிருந்து ஏகத்துவக் கொள்கையின் விளைநிலம் இந்துஸ்தானமாகிய இந்தியா என்பது தெளிவாகிறது.

உருவ வழிபாட்டின் உறைவிடம் கிரேக்கம்

வேத காலத்தில்கூட இந்தியாவில் உருவ வழிபாடு இருந்ததாகத் தெரியவில்லை. வேதங்களில் இறைவனைப் போற்றியும் இறைவனின் பல்வேறு தன்மைகளைப் பற்றிய வர்ணனைகள் மட்டுமே இருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, இறைவனின் தன்மைகளை அவரவர் கற்பனைக்கும் கண்ணோட்டத்திற்மேற்ப மனக் கண்ணால் கண்டு போற்றி வணங்கி வந்தார்கள்.

முதன்முதலாக சிலை வணக்கத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர்கள் பாமீர் பீடபூமியிலிருந்து கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் புகுந்த ஆரியர்கள் அல்லர். அவர்கள் சிந்துப் பகுதியில் வந்து குடியேறியிருந்தபோது அப்பகுதிக்கு வணிக நிமித்தம் வந்த கிரேக்கர்களே விக்கிரக ஆராதனை செய்யும் சிலை வணக்கத்தை அறிமுகம் செய்தவர்கள். உலகிலேயே

9