பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

133

பெரிதும் மகிழ்ந்துபோன கிருஸ்தவர்கள் முஸ்லிம்களின் உதவிக்கு நன்றி செலுத்தும் வகையில் தேவாலயங்களுக்கு அருகிலேயே இஸ்லாமிய முறைப்படி மசூதி ஒன்றைக் கட்டிக் கொள்வதற்கு நிலமளித்ததோடு கட்ட உதவியும் செய்தார்கள் என்பது வரலாறு தரும் செய்தி.

மாதா கோவில் தூண் பரிசளித்த கலீபா!

இந்தச் சமயத்தில் மற்றொரு சம்பவம் என் நினைவுக்கு வருகிறது. 1978ஆம் ஆண்டில் முதன் முறையாக இத்தாலி நாட்டின் தலைநகரான ரோமுக்குச் சென்றிருந்தேன். என்னை அழைத்துச் செல்ல வாட்டிகனைச் சேர்ந்த 'காலேஜியோ செயின்ட் பீட்ரோ'விலிருந்து திரு ஆன்டனி எனும் பாதிரியார் வந்திருந்தார். மிக இனிய சுபாவமுள்ளவர். நாங்கள் காரில் விமான தளத்திலிருந்து வந்து கொண்டிருந்தபோது வரும் வழியை ஒட்டியிருந்த பழங்கால மாதா கோயிலைக் காட்டி, அதையொட்டி, சிதிலமடைந்து கிடக்கும் மாபெரும் மண்டபத்தைக் காட்டி, "இதைக் கட்டியவர்கள் யார் தெரியுமா?” என்று கேட்டு, பதிலுக்கு என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

நான் சிரித்துக் கொண்டே வேடிக்கையாக "என் குடும்பத்திலிருந்து நிச்சயமாக யாரும் கட்டவில்லை. ஏனெனில், என் குடும்பத்திலிருந்து ரோம் மண்ணில் கால் வைக்கும் முதல் ஆள் நான்தான்” எனக் கூறிச் சிரித்தேன். ஆனால், அப்பாதிரியார் அடுத்து சொன்ன செய்தி எனக்கு வியப்பையும் திகைப்பையும் ஏற்படுத்துவதாயிருந்தது.

'உமர் அவர்களின் ஆட்சியின்போது இம் மாதா கோவில் கட்டப்பட்டு வந்தது. இதையறிந்த கலீஃபா உமர் அவர்கள் தன் நட்புணர்வையும் இஸ்லாத்தின் சமய நல்லிணக்க உணர்வையும் வெளிப்படுத்தும் வகையில் இம் மாதா கோயிலின் மண்டபத் தூண்கள் பன்னிரண்டையும் கட்டிக் கொடுத்ததாக ஒரு குறிப்பு வரலாற்றில்