பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/139

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

137

அண்ணலார் கூட்டிய முதல் சர்வ சமய மாநாடு

அன்று மதீனத்தில் வாழ முனைந்த அண்ணலார் (சல்) அவர்கள் அந்த நகரிலிருந்த அனைத்து மதத்தினையும் அழைத்து கூட்டம் நடத்தி வெவ்வேறு சமயச் சார்புள்ளவர்களாயினும் மதீனா நகர் குடிமக்கள் என்ற அளவில் எல்லோரும் ஒன்றுபட்டு, ஒற்றுமையாய் இருந்து, நமக்கு நாமே பாதுகாப்பு அரணாக விளங்குவோம் எனக் கூறினார்கள். அனைவரும் அதை ஏற்று ஒன்றுபட்டார்கள். அதுவரை ஒற்றுமையிலா அந் நகர் மக்களைப் பந்தாடி வந்த வெளி எதிரிகள், இதன் பின் இல்லாமலே போனார்கள்.

அன்று மதீனா நகரில் வாழ்ந்த அனைத்துச் சமயங்களையும் சேர்ந்த அனைவரும் ஒன்றிணைந்து ஓரணியாக நின்றார்கள். உலகில் நடைபெற்ற முதல் சர்வ சமய மாநாடாக அதனை இன்றும் வரலாற்றாசிரியர்கள் போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அனைத்துச் சமயத்தாரால்
தெரிவு செய்யப்பட்ட அண்ணலார்

தங்களை தலைமை தாங்கி வழிநடத்த எல்லா வகையிலும் தகுதி மிக்கவர் நாயகத் திருமேனி ஒருவரே என்பதை உணர்ந்த அனைத்துச் சமய மக்களும் மதீனாவின் தலைவராக அண்ணலாரைத் தேர்ந்தெடுத்து மகிழ்ந்தனர்.

மதீனா நகர மக்களின் அமைதியான சமூக வாழ்வுக்கும் சமுதாயப் பிளவோ பிணக்கோ ஏற்படாமல் தடுப்பதற்கும் நகரப் பாதுகாப்புக்குமான ஐம்பத்தி நான்கு ஷரத்துக்கள் கொண்ட சட்ட வடிவை உருவாக்கினார்கள். உலகிலேயே முறையான சட்ட வடிவு உருப்பெற்றது. இப்போது இதையே 'உலகின் முதல் முழுச் சட்டம்' என இன்றும் சட்ட உலகம் போற்றிப் புகழ்ந்து கொண்டுள்ளது.

அச் சட்டத்தின் சில ஷரத்துக்கள் இன்று நாம் அறிந்து பின்பற்றத் தக்கவைகள் மட்டுமல்ல, அவை என்றுமே