பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

நமக்கு வழிகாட்டியுதவும் வலுப் பெற்றவைகளுமாகும். அவற்றுள் ஒரு ஷரத்து,

"யாரேனும் ஒருவர் தன் மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாறிவிட்டால், அவரை யாரும் தடுக்கக் கூடாது. மதம் மாறியவரை அவர் போக்கிலேயே விட்டுவிட வேண்டும். அவரை வற்புறுத்தியோ அல்லது ஏதேனும் தீங்கு செய்தோ மத மாற்றத்திற்கு தடை எதுவும் விதிக்கக் கூடாது” என்பதாகும்.

இச் சட்டவிதியின் மூலம் மனிதனின் அடிப்படை உரிமை முழுமையாக நிலை நாட்டப்படுவதோடு முழுமையாகப் பாதுகாக்கவும் படுகிறது. இதற்கான இனிய சூழலை நபிகள் நாயகம் (சல்) அவர்கள் அன்றே ஏற்படுத்தியிருப்பது எண்ணி வியக்கத்தக்கதாயுள்ளது.

ஒரு சமய வணக்கத் தலத்தைக் காக்கும் பொறுப்பு
மற்ற சமயத்தவர்க்கு உண்டு

அதுமட்டுமல்ல, அந்தந்த மதத்தவரின் வணக்கத்தலங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அந்தந்த மதத்தைச் சார்ந்தவர்களுக்குண்டு என்றாலும், அதில் மற்ற மதத்தவர்களுக்கும் பங்கு உண்டு என்று மற்றொரு ஷரத்துக் கூறுகிறது. ஒரு பள்ளி வாசலை யாரேனும் இடிக்க வந்தால் அதைக் காக்கும் பொறுப்பு முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, அதற்குப் பக்கத்திலிருக்கும் யூதருக்கும் கிருஸ்தவருக்கும், இன்னும் எந்தெந்த மதத்தவர்கள் உண்டோ அவர்கட்கெல்லாம் மசூதியைக் காக்கும் பொறுப்பு உண்டு. அதே போல் ஒரு சர்ச்சை யூதர் இடிக்க வந்தால் அதைக் காக்கும் பொறுப்பு கிருஸ்தவருக்கும் ஒரு முஸ்லிமுக்கும் மற்றுமுள்ள பிற சமயத்தவருக்கும் உண்டு. அவ்வாறே யூத வணக்கத் தலத்தை யாரேனும் இடிக்க நேரிட்டால் யூதரோடு முஸ்லிம், கிருஸ்தவர், மற்றுமுள்ள மதத்தவர்கட்கும் உண்டு என்பது எவ்வளவு பெரிய சமுதாய ஒற்றுமைக்கும் ஒருங்கிணைவுக்கும் சமய நல்லிணக்கத்-