பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

பெருமானாரின் அன்புத் திருமகள் பாத்திமா திருமண வயதடைந்தபோது, அன்பும் அழகும் இனிய பண்பு நலங்களும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற அந்நங்கை நல்லாளை மணமுடிக்க பலரும் விரும்பினர். செல்வ வளமிக்கோரும் சமுதாயத்தில் உயர்நிலை பெற்றோரும் போட்டி போடவே செய்தனர். ஆனால் அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் பணப் பொருத்தமோ அந்தஸ்துப் பொருத்தமோ பார்க்காமல் தம் அருமை மகள் பாத்திமாவின் அன்பு, அழகு,இனிய பண்பு, அறிவு, அடக்கம், எளிமை இவற்றிற்கேற்ற மணமகனைத் தேடினார். சுருங்கச் சொன்னால் மனப் பொருத்தம் பார்த்து மணம் முடிக்க விழைந்தார். தன் அருமை மகளுக்கு எல்லா வகையிலும் ஏற்ற மணமகனாக அருந்திறல் வீரர் அலி (ரலி) அவர்களைத் தேர்ந்தெடுத்தார்.

வீரமும் விவேகமும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற வறியரான அலி (ரலி) அவர்களிடம் மணமகளுக்கு மஹர் கொடுக்கப் பொருளில்லா வறிய நிலை. அலி (ரலி) தன் இரும்புக் கவச உடையையே மகராகத் தந்து மணமுடித்தார். உலகிலே மிகமிக எளிமையாக நடைபெற்ற திருமணம் அண்ணலாரின் அன்பு மகளார் பாத்திமா நாச்சியார் திருமணமாகும்.

திருமணம் முடிந்த மறுநாள் லுஹர் தொழுகைக்கென அண்ணல் நபி (சல்) அவர்களும் அவர்தம் மருகர் அலி (ரலி) அவர்களும் பள்ளிக்குச் சென்றுள்ள நிலையில் மணமகள் பாத்திமா நாச்சியார் தொழுகை முடித்து அமர்ந்திருந்தார்.

அச் சமயம் முதிய வறியவர் ஒருவர் பிச்சை கேட்டுக் குரல் எழுப்பினர். விரைந்து சென்ற பாத்திமா வறியவர்க்கு உணவளிக்க, அதனை உண்டு மகிழ்ந்த முதிய வறியவர் நன்றி கூறி நடக்கத் தொடங்கினார். உடலில் போதிய ஆடையில்லாததால் அவர் உடல் குளிரால் நடுங்கியது. இதைக் கண்டு வருந்திய பாத்திமாவை நோக்கி, குளிர் தாள