உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

145

என்றால், எவ்வளவு எளிமையாக ஆடம்பரமேதுமின்றி நடைபெற்ற மணவிழாவாக அது இருந்திருக்க முடியும் என்பதை ஒருகணம் எண்ணிப் பாருங்கள்.

ஒரு இஸ்லாமியனின் திருமணம் ஆடம்பரமேதும் இன்றி எளிமையாக, முறையாக நடைபெற வேண்டும் என்பதை நாம் உணர்ந்து, தெளிந்து, கடைப்பிடிக்கக் கடமைப்பட்டவர்களாக உள்ளோம் என்பதை உணர வேண்டும். இடைக்காலத்தில் கைக்கூலி எனும் வரதட்சணை போன்ற சமூகத் தீங்குகளை அறவே விட்டொழிக்க வேண்டும்.

பெண்ணுக்கு மணமகன் கட்டாயம் வழங்க வேண்டிய 'மஹர்' தொகை, மணமகனின் வசதியைப் பொறுத்து அமைவதாகும்.

அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் தன் மகள் பாத்திமா நாச்சியாருக்கு ஏற்ற மணமகனாக அலி (ரலி) அவர்களைத் தேர்ந்தெடுத்தபோது, பெண்ணுக்கு மஹராகக் கொடுப்பதற்கு அலியாரிடம் செல்வமேதும் இருக்கவில்லை என்றாலும் தன்னிடமிருந்த இரும்புக் கவசத்தை மஹராகக் கொடுத்து, மணமுடித்தார் அலி (ரலி). அவரவர் சக்திக்கேற்ப எதை வேண்டுமானாலும் மஹராகத் தந்து மண முடிக்கலாம். ஆனால், கட்டாயமாக மஹர் தந்தே மண முடிக்க வேண்டும் என்பது இஸ்லாம் வகுத்தளித்துள்ள நியதி.

இன்று என்ன நடக்கிறது. நிக்காஹ்வின்போது, மஹரை நிக்காஹ் புத்தகத்தில் குறிப்பிடுவதோடு சரி. மணப்பெண்ணைத் தொடுமுன், கையில் மஹர் தந்து, சலாம் கூறி, அப்பெண்ணின் கரத்தைப் பற்ற வேண்டும் என்பதையெல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டு, நிக்காஹ் புத்தகத்தில் குறிக்கிறோமே தவிர கொடுப்பதில்லை. வாழ்நாள் கடன். சிலர், இறப்பின் எல்லையில் இருக்கும் போது, மஹருக்காக மனம் பொருந்திக் கொள்ளுமாரும்