பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

மனைவியிடம் கூறி, கொடுக்காமலேயே இறைவனிடம் சென்று விடுவர்.

மஹரே கொடுமையாகியுள்ள விந்தை

இன்னும் எகிப்து போன்ற நாடுகளில் 'மஹர்' தொகை வரதட்சிணையைவிட கொடுமையானதாக விசுவரூபமெடுத்து, மணமக்களை வாட்டி வதைத்து வருகிறது. அப்படியொரு சம்பவத்தை நானே எகிப்து தலைநகரான கெய்ரோவில் சந்திக்க நேர்ந்தது.

இஸ்லாத்தில் இல்லாத வரதட்சிணை நம்மை வாட்டி வருவது போல இஸ்லாமிய நாடுகளில் அனுமதிக்கப்பட்ட மஹர் விசுவரூபமெடுத்து ஆட்டிப் படைத்து வருகிறது. இங்கே பெண் பாதிக்கப்படுகிறாள். ஆங்கே ஆண் பாதிக்கப்படுகிறான். இருவேறு நிலைகளில் இரு பெரும் சமூகத் தீங்குகளாக உருமாற நாமே நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணமாக அமைகிறோம்.

இதிலிருந்து முற்றாக விடுபட இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடு எதுவோ, திருமறை மூலமும் பெருமானார் (சல்) அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளின்படியும் வாழ நாம் ஒவ்வொருவரும் உறுதி கொள்ள வேண்டும். இஸ்லாத்தில் இல்லாத அனாச்சாரம் எதையும் இடம் பெற அனுமதிக்கக் கூடாது. இருக்கும் நியதிகளை கூடுதல் குறைச்சல் இல்லாதவாறு உள்ளது உள்ளபடி பின்பற்றியொழுக முற்பட வேண்டும். அதில் நாம் மனத்திண்மை மிக்கவர்களாக இருக்க வேண்டும்.

பற்று வேறு. வெறி வேறு

இதற்கு அடிப்படைப் பண்பாக அமைவது இஸ்லாத்தின்மீது நம்பிக்கையும் பற்றும் செயல்பாடுகளும் ஆகும். மார்க்கப் பற்றைச் சிலர் இனப்பற்றாகக் கொண்டு தடுமாறுகிறார்கள். மார்க்கப்பற்று என்பது இஸ்லாமிய