பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மனித நேயப் பண்பு
வளர்த்த மாநபி


மீலாது விழாக்கள் எவ்வகையில் கொண்டாடப்பட வேண்டும் என நான் நீண்டநாளாக மனத்தளவில் எண்ணிவருகிறேனோ அம்முறையிலேயே இங்கு மீலாது விழா நடைபெற்று வருவது எனக்குப் பேருவகை அளிப்பதாயுள்ளது. அதற்காக இவ்விழா ஏற்பட்டளர்கட்கு என் இதயப்பூர்வமாக வாழ்த்தையும் இம் முயற்சி மேலும் மேலும் தொடர வேண்டும் என்ற என் வேட்கையையும் முதற்கண் புலப்படுத்திக் கொள்கிறேன்.

பொருத்தமான முறையில் மீலாது விழா

நபிகள் நாயகம் (சல்) அவர்களின் பிறந்தநாள் பெரு விழாவான மீலாது விழா, முஸ்லிம்கள் மட்டுமே கொண்டாடும் விழா அன்று. மக்கள் அனைவராலும் கொண்டாடப்பட வேண்டிய ஒரு பொது விழாவாகும். சமயம், இன, மொழி, சாதியப்போக்குகள் அனைத்தையும் கடந்த நிலையில் நடைபெற வேண்டிய பொது விழா. இவ் விழாவின் முக்கியத்துவத்தைப் பொது விழாவாகக் கொண்டாடப்பட வேண்டிய இன்றிமையாத் தேவையை, கற்றறிந்த பெரியோர்கள் இன்று தெளிவாக உணர்வதோடு,