பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

157

பண்பாட்டின் சிறப்புத் தன்மை என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்ப் பண்பாட்டின் தனித்துவம்

தமிழ்ப் பண்பாடு என்பது மொழி அடிப்படையில் அமைவது. மொழி என்பது மொழியப்படுவது. மொழி வழி உருவாகும் உணர்வுகளுக்கு வடிவம் தந்து வெளிப்படுத்துவது. இவ்வகையில் பல்வேறு மொழிகளின் பண்பாடுகள் அமைகின்றன. தமிழ்ப் பண்பாடு என்பதும் அவ்வகையில் அமைந்துள்ளதேயாகும்.

அவ்வாறாயின் தமிழ்ப் பண்பாடு எப்போது தோன்றியது? எல்லாவற்றிற்கும் வரலாறு உண்டு. வரலாறு இல்லாதது எதுவுமே உலகில் இல்லை. இந்த உலகம் எப்போது தோன்றியது? அதற்கும் ஒரு வரலாறு உண்டு. அதேபோல் தமிழ்ப் பண்பாடு என்று குறிப்பது எப்போது தோன்றியது? யாரால் வளர்க்கப்பட்டது? யார் யாரெல்லாம் அதை வளர்க்கப் பாடுபட்டார்கள்? யார் யாரெல்லாம் அதை வளப்படுத்த உழைத்தார்கள்? என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும்போதுதான் அதற்கும் ஒரு வரலாறு இருப்பது தெரிய வருகிறது.

அல்லாஹ் ஆதி மனிதர் ஆதாமோடு பேசிய மொழி தமிழ்

சென்னையில் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம் என்ற பெரும் அமைப்பு உண்டு. அந்த அமைப்பிலே நானும் ஒரு உறுப்பினனாக இருந்தாலும், அதன் கூட்டங்களிலே நான் கலந்து கொள்வதைத் தவிர்த்து வந்தேன். காரணம், அச்சங்கத்தில் இருக்கும் அங்கத்தினர்களில் பெரும்பாலோர் தமிழ் பேசும் முஸ்லிம்களாக இருந்த போதிலும் அதன் நடவடிக்கைகள் அனைத்தும் ஆங்கிலத்திலும் உருது மொழியிலுமே நடைபெறுவது வழக்கம். இதனால் நானும் இன்னும் சில நண்பர்களும் கூட்டங்களில் கலந்து