பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

என்று கூறி விடுவேன். ஏனெனில், முஸ்லிமல்லாதவர்களிடையே இஸ்லாத்தை எடுத்துச் சொல்ல வேண்டிய காலக் கட்டாயம் நமக்குள்ளது.

இன்னும் சொல்லப் போனால், என்னைப் பொருத்த வரையில் 'மீலாது விழா' சமயத்தில், 'தினமணி' போன்ற வெகுஜன பத்திரிகைகளிலே 'ஓம் சக்தி' போன்ற பிற சமய இதழ்களிலே, இஸ்லாத்தைப் பற்றியும் பெருமானார் (சல்) அவர்களின் வாழ்வையும் வாக்கையும் பல்வேறு கோணங்களில் கட்டுரை எழுதி விளக்கிச் சொல்ல முடிகிறது. சகோதர சமயத்தவர்கள் இஸ்லாத்தைச் சரியான முறையில் புரிந்து கொள்வதற்கு, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மனித குலத்துக்கு வகுத்தளித்த வாழ்வியல் நெறிமுறைகளை, அதற்கு மூலமாகவுள்ள திருமறையாகிய திருக்குர்ஆனின் இறை வசனங்களை நாம் மக்களிடத்தில் கொண்டு போய்ச்சேர்க்கும் அரிய வாய்ப்பை நமக்கு நல்கிறது. இஸ்லாத்தை அறிந்த முஸ்லிம் பெருமக்களுக்கு நினைவூட்டுகிறோம். இஸ்லாத்தைப் பற்றிச் சரிவரத் தெரியாதவர்களுக்கு புதிய செய்தியாக நாம் சொல்ல முயற்சி செய்கின்றோம்.

இஸ்லாமியப் பெருமக்களிடையே நான் மனம் திறந்து பேச விழைகிறேன். நான் கடந்த பல ஆண்டுகளாக உலக நாடுகள் பலவற்றிலும் சுற்றுப் பயணம் செய்துள்ளேன். முடிந்தவரை மக்களின் நாடி, நரம்புகளையெல்லாம் தொட்டுப் பார்க்கக்கூடிய பத்திரிகைத் தொழிலிலே ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன், கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக.

இயலாமைக்குக் காரணம் தேடும் இஸ்லாமியர்கள் !

இஸ்லாத்தை முழுமையாக, சரியான கோணத்திலே புரிந்து கொண்டவர்கள் இன்று எண்ணிக்கையில் மிகச் சிறுபான்மையினராகத்தான் இருக்கிறார்கள். புரிந்து கொண்டுவிட்டதாக மனப்பிரமை கொண்டிருக்கக்