பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

தூதர்கள் ஒரு இலட்சத்து இருபத்தி நான்காயிரம் பேர் என்பது இஸ்லாமிய மரபு. அவர்களுள் முதல் நபி முதல் மனிதரான ஆதாம் (அலை). இறுதித் தூதர் நபிகள் நாயகம் (சல்) அவர்களாவர். முதல் மனிதரும் முதல் இறை தூதருமான ஆதாம் (அலை) அவர்கட்கு, அவரது சந்ததியினருக்கு இறைநெறி புகட்டி, நேர்வழி காட்ட இறைவன் முதன் முதலாக இறைமறையை வழங்குகிறான். எந்த மொழியில்?

முதல்நபி பிறந்த குமரிக் கண்டம்

ஆதம் (அலை) எங்கே பிறந்தார். முதல் மனிதர் ஆதம் (அலை) வாழ்ந்த இடம் 'லெமூரியா கான்டினென்ட்' என்று நிலவியல் ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகின்ற 'குமரிக் கண்ட'மாகும். இப்பகுதி இன்றைய ஆஸ்திரேலியா தொடங்கி இந்தியா உள்ளடங்களாக உள்ள பகுதி. தொடக்கத்தில் இப்பெரும் நிலப்பகுதி பல நாடுகளாக இருந்து, பின் பிளவுபட்டு, கடலால் விழுங்கப்பட்டு நீர்ப் பகுதியானது என்பது பூகோளாய்வியல் வல்லுநர்கள் கருத்து.

அன்றைய குமரிக் கண்டத்தில் உள்ள மலையொன்றில் தான் முதல் மனிதர் ஆதாம் (அலை) இறைவனால் இறக்கப்பட்டிருந்தார். அங்கிருந்துதான் அவரது சந்ததியினர் பல்கிப் பெருகினர். இன்றும் முதல் மனிதர் மண்ணுலகில் இறக்கப்பட்ட மலை 'ஆதம் மலை' என அழைக்கப்படுகிறது. இது இன்றைய இலங்கைப் பகுதியில் அமைந்துள்ளது. ஆதம் (அலை) அவர்களின் மக்களின் சமாதி இன்று இராமேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ளது. இச் சந்ததியினர் பல்கிப் பெருகிய குமரிக் கண்டப் பகுதி 49 நாடுகளாகப் பிரிந்திருந்தது. அங்குள்ள மக்கள் அனைவரும் பேசிய மொழி தமிழ். அங்குதான் முதல் தமிழ்ச் சங்கமும் இரண்டாம் தமிழ்ச் சங்கமும் அமைந்திருந்தது. கடல் கோளால் இந்நிலப் பகுதி பிளவுப்பட்டு, கடலுள் மூழ்கிய பின்னர்தான் எஞ்சிய நிலப் பகுதியான இந்தியத்