பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

161

தென்கோடி மதுரை நகரில் மூன்றாவது தமிழ்ச் சங்கம் அமைந்தது என்பது தொடர் வரலாறாகும்.

ஆதம் (அலை) பேசிய மொழி தமிழே

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த குமரிகண்ட மக்கள் அனைவரும் பேசிய மொழி தமிழ் என்றால் அப் பகுதியில் இறைவனால் இறக்கப்பட்ட முதல் மனிதர் ஆதம்(அலை) பேசிய மொழியும் தமிழாகத் தானே இருக்க முடியும். ஆதம் (அலை) அவர்கட்குத் தெரிந்த மொழியில்தானே இறைவன் தன் வேதத்தை வழங்கியயிருக்க முடியும். எனவே, ஆதிமனிதர் ஆதம் (அலை) அவர்களோடு இறைவன் தமிழ் மொழில் தானே பேசியிருக்க முடியும். எனவே, இறைவன் பேசிய தமிழில் பேசுகிறேன் என்று கூறி, தமிழில் உரையாற்றி, அதுவரை முஸ்லிம் பட்டதாரிகள் சங்கதில் நிலவிய ஆங்கில, உருது மொழி ஆதிக்கத் திற்கு முடிவு கட்டப்பட்டது. அன்று முதல் இன்று வரை அச்சங்க நடவடிக்கைகள் தமிழிலும் நடைபெற்று வருகின்றன.

உலகின் மிக மூத்த பண்பாடு

'பண்பாடு’ என்பது வேறொன்றுமில்லை, இதை சம்ஸ்கிருதத்தில் கலாச்சாரம் என்று சொல்வார்கள். கலை, ஆச்சாரம் என்ற இரு சொற்கள் இணைந்ததே கலாச்சாரம். ஆச்சாரம் என்பது மரபு வழிக் கைகொண்டு வரும் சடங்குகள். வழிவழியாக வரும் கலையையும் ஆச்சாரத்தையும் இணைத்துக் கலாச்சாரம் என வழங்குகிறோம். தமிழிலே இதைப் பண்பாடு எனக் குறிப்பிடுகிறோம். பண்பட்ட மனத்தை உருவாக்கி, அதனடிப்படையில் செயல்பாடுகளை அமைத்து இயங்குவதனால் அது பண்பட்டதாகிறது. ஆகவே, இந்தப் பண்பாட்டின் வேர் எங்கிருந்து வருகிறதென்றால் ஆதி மனிதரிலிருந்து வருகிறதெனலாம். ஆதி மனிதர் தன் பழக்க வழக்கங்களையெல்லாம் தன் வழியில் வந்த சந்ததியினர்க்குச்