பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/165

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

163ஐக்கியநாடுகள் சபையின் பேரங்கமான யுனெஸ்கோ நிறுவனம் தமிழ் உட்பட முப்பது உலக மொழிகளில் 'யுனெஸ்கோ கூரியர்' என்ற இதழைக் கடந்த 45 ஆண்டுகட்கு மேலாக நடத்திக் கொண்டு வருகிறது. அரசியல் தவிர்த்து அனைத்து விஷயங்களையும் உலகளாவிய முறையில், அவ்வத்துறை உலகப் பெரும் வல்லுநர்கள் எழுதும் ஆய்வுக் கட்டுரைகளோடு வெளியிட்டு வருகிறோம். தமிழ்ப் பதிப்பின் ஆசிரியனாகக் கடந்த முப்பத்தியிரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன்.

அவ்வப்போது 30 மொழி ஆசிரியர்களும் தலைமையகமான பாரிசில் கூடி அடுத்துவரும் இதழ்களுக்கான கருப்பொருளை - தலைப்புகளை கலந்து பேசி முடிவு செய்வோம்.

வாழும் தமிழர் பண்பாடு

1978ஆம் ஆண்டில் நடைபெற்ற அத்தகைய ஆசிரியர்கள். கூட்டத்தில் உலகத்தின் மிக மூத்த பண்பாடாகவும் - மூவாயிரம் ஆண்டுகட்கு மேலாக வாழும் பண்பாடாகவும் அமைந்துள்ள தமிழ்ப் பண்பாட்டைப் பற்றிச் சிறப்பிதழ் வெளியிட வேண்டும் எனக் கூறியபோது பிற ஆசிரியர்களெல்லாம் ஆச்சரியத்தோடு என்னைப் பார்த்தார்கள். மூவாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்ப் பண்பாடு வாழ்ந்து கொண்டிருக்கிறதா? உலகப் பெரும் பண்பாடுகளாகக் கருதப்பட்ட எகிப்திய, சுமேரிய, கிரேக்க, ரோம, கார்த்தேஜியப் பண்பாடுகளெல்லாம் இருக்குமிடம் தெரியாமல் அழிந்து போய்விட்டன. அவற்றின் எஞ்சிய எச்சங்களை இடிபாடுகளிலும், மண்ணிற்குள்லும் மறைந்து போய்விட்டன. பழைய இலக்கியங்களிலும் வரலாற்றிலும் மட்டுமே அவற்றை அறிய முடியும். இத்தகைய சூழலில் மூவாயிரம் ஆண்டுகளாக ஒரு பண்பாடு அழியாமல் இன்னும் மக்களுடைய அன்றாட வாழ்வில் ஊடாடி உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறதென்றால் அது உலக அதிசயங்