பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

களில் எட்டாவது அதிசயமாகத்தான் இருக்க முடியும் என கேலியும் கிண்டலும் கலந்த தொனியில் கூறி வியந்தனர். நான் ஏதோ தமிழ்ப் பண்பாட்டின் மீது கொண்டுள்ள பற்றாலும் பாசத்தாலும் இவ்வாறு கூறுவதாக எண்ணிய அவர்கள் இவ்வுணர்வை வெளிப்படுத்தவும் தயங்கவில்லை.

வாழும் தமிழ்ப் பண்பாட்டை மறுத்துரைத்தவர்கட்கு பல்வேறு ஆதாரங்களைத் தந்து, இறுதியில் இனியும் உங்களுக்கு இதில் ஐயம் இருந்தால் உங்களில் யாரேனும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, உங்கள் சார்பில் தமிழ்நாடு அனுப்பி நேரிடையாக ஆய்வு செய்து, நான் கூறுவது அனைத்தும் உண்மை என ஆதார பூர்வமாகக் கண்டறிந்த பின் வாழும் ‘தமிழ்ப் பண்பாடு' பற்றிய சிறப்பிதழை வெளியிடுமாறு சவால் விடும் போக்கில் வேண்டினேன். கூட்டம் என் சவாலை ஏற்று 'யுனெஸ்கோ கூரியர்' இதழின் துணைத் தலைமையாசிரியர் திருமதி ஒல்கா ரோடலை அனுப்ப முடிவு செய்தனர். அவரும் தமிழகம் வந்தார்.

‘வாழும் தமிழ்ப் பண்பாடு' பற்றி ஆய்வு செய்ய பாரிசிலிருந்து சென்னை வந்த அவர்களை தமிழகமெங்கும் அழைத்துச் சென்றேன். கிராமப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையை நேரிற்காட்டி விளக்கினேன். சங்கப் பாடல்களில் விவரிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை முறையின் அடிப்படையிலேயே இன்றைய நாட்டுப்புற மக்களின் வாழ்க்கை முறையும் அமைந்திருப்பதை நேரில் காணச் செய்தேன். நிலத்தை உழுது பண்படுத்தும் பாங்கையும் உழைப்புத் தெரியாது ஏற்றப்பாட்டிலிருந்து, நாற்று நடவுப் பாட்டுவரை இசைக்கப்படுவதை சங்கப் பாடல்களோடு ஒப்பிட்டுக் காட்டினேன். விருந்தினர்களை வரவேற்கும் பாங்கையும் அதற்கேதுவாக கிராமப்புற குடிசைவாசி கூட, வெளியூர் விருந்தாளி இரவாயினும் பகலாயினும் தங்கிச் செல்ல வாய்ப்பாக இன்றும் வீட்டைச்