பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

165

சுற்றி திண்ணை கட்டும் பாங்கையும் இன்னும் பற்பல பண்பாட்டும் கூறாகவும் சங்க இலக்கியம் கூறுகிறபடியே இன்றைய தனிமனித வாழ்விலும் சமுதாய வாழ்விலும் படிந்திருக்கும் பண்பாட்டுக் கூறுகளை - தன்மைகளை அறிந்து மகிழ்ந்தார். இன்றும் நாட்டுப்புற மக்களின் நடையுடை பாவனைகளும் கைக் கொள்ளும் பழக்கவழக்கங்களும் அவை பழம் பெரும் தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படையிலேயே அமைந்திருப்பதை யெல்லாம் ஆய்வு செய்து, தமிழ்ப் பண்பாட்டின் உன்னதத்தை-உயர்வை நன்கு உணர்ந்தவராக பாரீஸ் தலைமையகம் திரும்பி, நான் தொடக்கத்தில் கொடுத்திருந்த தலைப்பான "தமிழரின் வாழும் பண்பாடு" (The Living Culture of Tamils) எனும் தலைப்பிலேயே எட்டு வண்ணப் பக்கங்களோடு சிறப்பிதழாக 30 உலக மொழிகளில் வெளியிட்டுச் சிறப்புச் செய்தது.

இதில் குறிப்பிடத்தக்க ஒரு சிறப்பம்சம் உண்டு. யுனெஸ்கோ கூரியர்" இதழ் தொடங்கப்பட்ட காலம் முதலே எந்த ஒரு குறிப்பிட்ட பண்பாட்டையும் அலசி ஆராயும் முறையில் வெளியிட்டதே இல்லை. கிரேக்க, ரோம, எகிப்திய, கார்த்தேஜியப் பண்பாடுகளைப்பற்றி பேச நேர்ந்த போது கூட அப்பண்பாடுகளின் நிலைக்களனாக அமைந்துள்ள நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது எப்படி? என்பதைப் பற்றிய ஆய்விதழாக அமைந்தது.

ஆனால், உலகப் படத்தில் குண்டூசி முனையளவேயுள்ள தமிழ்நாட்டின் பண்பாட்டை உலகப் பண்பாட்டு வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு செய்து, அதன் பல்வேறு முகப்பட்ட பண்பாட்டு உயர்வுகளை உலகளாவிய முறையில் வெளிப்படுத்திய இதழ் இது ஒன்றேயாகும்.

இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால், தொடக்கக் கட்டத்தில் யாரெல்லாம் தமிழ்ப் பண்பாட்டைக்