பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

குறைத்து மதிப்பிட்டுப் பேசினார்களோ அவர்களெல்லாம் சிறப்பிதழ் வெளி வந்தபின் பலவாறு தமிழ்ப் பண்பாட்டின் சிறப்புகளை அடுத்த கூட்டத்தில் பாராட்டிப் பேசியதுதான். அது மட்டுமல்ல ஜப்பானிய, கொரிய, போர்ச்சுக்கீசிய மொழிகளில் வெளிவரும் பல்வேறு இதழ்களும் கூரியர் சிறப்பிதழில் வெளிவந்த தமிழ்ப் பண்பாட்டு கட்டுரைகளை மறு வெளியீடு செய்து வந்ததாகும்.

இதழின் சிறப்பை உணர்ந்த சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம், ஒரு தொழில் நுட்பப் பல்கலைக் கழகமாக இருந்த போதிலும் 'வாழும் தமிழ்ப் பண்பாடு' சிறப்பிதழை சிறப்பான விழா நடத்தி, வெளியிட்டுப் பெருமைப் படுத்தியது.

உலகத்தமிழ் மாநாடுகள் சாதிக்காத சாதனை

இச்சிறப்பிதழ் வெளியீட்டினால் அச்சிறப்பிதழை வெளிவர பெரு முயற்சி மேற்கொண்ட எனக்கு, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் சட்டத்தையே மாற்றி, கலைஞர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுவந்த 'கலை மாமணி விருதை கலைத்துறையைச் சாராத எனக்கு 'உலகெங்கும் தமிழ்க் கலை, பண்பாட்டுப் பரப்புநர்' என்ற தலைப்பின் கீழ் வழங்கிச் சிறப்பித்தார்.

நம் தமிழ்ப் பண்பாட்டின் உயர்வை இன்னும் நாமே சரிவர அறிந்து, உணர்ந்து தெளியவில்லை. ஆழமான வேரில் உருவான இடப் பண்பாட்டின் உயர்வை உலகறியச் செய்ய வேண்டும்; முடிந்தால் உலகெங்கும் உள்ள ஒவ்வொருவரின் வீட்டின் படிப்பறைக்கே சென்று, தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பை விளக்கிக் கூற வேண்டும் என்ற என் தனியாத ஆர்வமும் இதன்மூலம் முழுமை பெற்றதென்றே கூற வேண்டும். “பல உலகத் தமிழ் மாநாடுகளால் சாதிக்க முடியாத இமாலயச் சாதனையை மணவை முஸ்தபா சாதித்துக் காட்டிவிட்டார்” என்று சிலம்புச் செல்வர்