பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

கைகளைப் பற்றியவராக "அடிமை வாணிகம் மூலம் அடிமை விலங்குகளாக இந்நாட்டில் என் மூதாதையர் விற்கப்பட்ட பின்னர் என் குடும்பத்தவர் எவருமே அமெரிக்காவை விட்டு வெளியே சென்றது கிடையாது.

பல ஆண்டுகட்கு முன்பு எங்கள் இனத்தைச் சேர்ந்த பாக்சர் கிளேசியஸ் கிளே இஸ்லாத்தில் இணைந்து 'முஹம்மது அலி' என்ற பெயரோடு இஸ்லாத்தைப் பற்றி சொற்பொழிவாற்றியதைப் பலமுறை கேட்டேன். அப்போதெல்லாம் அவர் பிலால் (ரலி) பற்றி குறிப்பிடுவதுண்டு.

ஒருமுறை முஹம்மதலியின் இஸ்லாமிக் ஸ்டடி சென்டருக்குச் சென்றிருந்தேன். அங்கே பிலால் (ரலி) பற்றிய நூல் கிடைத்தது. அந்நூலைப் படித்தபோது, பல விதமான எண்ண அலைகள் என்னுள் எழுந்தன. கறுப்பு இன மக்களாகிய எங்களையெல்லாம் மிருகங்களை விடச் சற்று மேம்பட்டவர்களாகக் கருதி, ஆடு, மாடுகளைப் போல் விற்று, வாங்கிவந்த காலகட்டத்தில் எங்களையெல்லாம் மனிதர்களாக மதிக்கக் கற்பித்த ஒரு மார்க்கம் இஸ்லாம். மதீனாவில் முதல் பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்டவுடன் அதான் எனும் பாங்கொலி எழுப்ப எங்களின் இனத்தைச் சார்ந்த பிலால் (ரலி) அவர்களை அண்ணலார் தேர்வு செய்ததன் மூலம் மனிதர்களில் மேம்பட்ட உன்னத நிலையை உருவாக்கியதை அறிந்தபோது மனம் நெகிழ்ந்து விட்டேன். சட்டபூர்வமாக 'சமநிலை’ என்று சொன்ன போதிலும் வெள்ளையர்களால் தாரதம்மியத்தோடு நடத்தப்படும் கறுப்பு இனமக்கள் உய்ய இஸ்லாத்தைத் தவிர வேறு வழியே இல்லை என உணர்ந்து இறைநெறியாகிய இஸ்லாத்தைத் தழுவி, பெருமானார் (சல்) அவர்களின் முன்மாதிரி பெருவாழ்வை பேணி வருகிறேன். எங்கள் குடும்பத்தில் ராணுவத்தில் பணியாற்றும் ஒருவரைத் தவிர அனைவருமே முஸ்லிமாகி விட்டோம். இப்போது என்றுமே அனுபவித்திராத