பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

173

சமத்துவத்தை - மதிப்பு மரியாதையை முஸ்லிம் என்ற முறையில் அனுபவித்து வருகிறேன்” என்று கூறும்போதே அவர் கண்கள் ஆனந்தக் கண்ணிரைப் பொழிந்தன.

பெருகிவரும் பிலால் அலை

அண்மையில் நான் ஹஜ் பயணம் மேற்கொண்டிருந்த போது கஃபத்துல்லாவில் அஸர் தொழுகையை முடித்து 'மக்ரிப் தொழுகைக்காகக் காத்திருந்தபோது அருகில் உரையாடிக் கொண்டிருந்த இந்தோனேசியப் பேராசிரியர் ஒருவரிடம் இச்சம்பவத்தை விவரித்துக் கொண்டிருந்த போது, அருகிலிருந்த துணுக்குப் பின்னாலிருந்து அழுகுரல் கேட்டது. அழுகுரல் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. நான் பேசி முடித்தபோது, கண்கள் நீரைச் சொறிய கறுப்பின இளைஞர் ஒருவர் என் கைகளைப் பற்றியவராக நீங்கள் இதுவரை பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண் டிருந்தேன். நீங்கள் பேசியது அத்தனையும் சத்தியம். அமெரிக்க என்ஜினியரிங் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது முஹம்மதலியின் சொற் பொழிவைக் கேட்டேன். அதன்பிறகு பல இஸ்லாமிய நூல்களைப் படித்தேன். அந்தக் காலத்திலேயே கறுப்பரான பிலால் (ரலி) அவர்கட்கு இஸ்லாமும் பெருமானாரும் தந்த பெருமை மிகு சிறப்புகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தில் இணைந்தேன். இஸ்லாத்தில் இணைவதற்கு முன்பு ஒரு கிறிஸ்தவப் பெண்ணைக் காதலித்தேன். நான் இஸ்லாத்தில் இணைந்தபின்னர் அவளையும் இஸ்லாத்தில் இணையுமாறு கூறினேன். இணையும்வரை காத்திருப்ப தாகவும் கூறினேன். அவளும் மனம் மாறி இஸ்லாத்தில் இணைந்தபின் எங்கள் நிக்காஹ் இஸ்லாமிய முறைப்படி நடைபெற்றது. இப்போது என் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள். இன்னும் இரண்டாண்டுகளில் குடும்பத் தோடு ஹஜ் செய்ய திட்டமிட்டுள்ளோம். நான் இஸ்லாத்தில் இணைவதற்கு முன் வெள்ளையர்கள் என்னை நடத்திய