பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

175

கஷ்டம். எனவே, பெருமானார் அவர்கள், அக்குழுவில் இருந்தவர்களை அங்கிருந்த முஸ்லிம் குடும்பத்திற்கு ஒருவர் வீதம் அழைத்துச் சென்று விருந்தளித்து உபசரிக்க வேண்டும் என்று பணித்தார்கள். அவ்வாறே அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த முரட்டு மனிதனை யாரும் அழைத்துச் செல்ல விரும்பாததால், அவன் மட்டும் தனித்து விடப்பட்டான். நிலைமை உணர்ந்த பெருமானார் அம்முரடனைத் தன் விருந்தாளியாக அழைத்துச் சென்றார்கள். பெருமானார் (சல்) அவர்களின் வீடு நோக்கி நடக்கும்போதே அம்மூர்க்கன் தன் மனதுக்குள் 'இன்று பெருமானார் வீட்டிலுள்ள அத்தனை உணவுகளையும் உண்டு, வீட்டிலுள்ள அனைவரையும் பட்டினி போட வேண்டும்' என எண்ணியவனாய் பெருமானார் இல்லத்துள் புகுந்தான். பெருமானார் குடும்பத்துக்கு என அன்று சமைத்து வைத்திருந்த உணவு வகைகளையெல்லாம் பெருமானார் அம்முரடனுக்கு அன்போடு உண்ணக் கொடுத்தார். அக்குடும்பத்தினரும் உண்ண வேண்டுமே என்ற எண்ணம் அறவே இல்லாதவனாக, அக்குடும்பத்தினர் அனைவரையயும் பட்டினி போட வேண்டும் என்ற வஞ்சக உணர்வோடு கொஞ்சமும் மீதம் வைக்காமல் தின்று தீர்த்தான். பெருமானாரும் குடும்பத்தவர்களும் கொஞ்சமும் முகம் சுளிக்காமல் விருந்தளித்தனர்.

வந்த விருந்தாளி உண்ட களைப்புத் தீர, உறங்க உயர்தர படுக்கை விரிப்புகளை விரித்து உறங்கச் செய்தனர். மகிழ்ச்சிப் பெருக்கோடு உறங்கச் சென்ற அத்துவுடன் அளவுக்கதிகமாக உண்டதால் செரியாமைக் கோளாறு ஏற்பட்டு அவதிப்பட்டான். நள்ளிரவில் வாந்தி, பேதியால் அவ்வறையை நாசப்படுத்தினான். விடிவதற்குள் வெளி யேறி ஓடி விட வேண்டும் என எண்ணி, விடியுமுன் வெளி யேறினான். அவன் நீண்டதுரம் வந்தபின்பே நன்றாக 2 விடிந்தது. அப்போதுதான் தான் தங்கியிருந்த அறையில் தன்

2